Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம டோஸ்.. டீம் ஓனர் வரை கொந்தளிப்பு.. 2 வீரர்களை நீக்கிய அனில் கும்ப்ளே.. பரபர சம்பவம்!

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கர்நாடக மாநில வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்ததை ரசிகர்கள் கண்டித்தனர்.

இந்த ஐபிஎல் தொடரின் பஞ்சாப் அணியை, கர்நாடகா அணி என்றே கூறலாம் எனும் அளவிற்கு ஏகப்பட்ட கர்நாடக மாநில வீரர்கள் அந்த அணியில் இருந்தனர்.

அது கடும் சர்ச்சையாகி அணியில் உரிமையாளர்கள் விசாரிக்கும் வரை சென்ற நிலையில் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இரண்டு கர்நாடக மாநில வீரர்களை நீக்கி பஞ்சாப் வீரர்களை சேர்த்துள்ளார்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த சீசனில் பிளே-ஆஃப் செல்லாததை அடுத்து கேப்டன், பயிற்சியாளர் என அனைவரும் மாற்றப்பட்டனர். அப்படி இருந்தும் அந்த அணி இந்த சீசனிலும் தடுமாறி வருகிறது. அதற்கு ஒரு காரணமாக கர்நாடக வீரர்கள் ஆதிக்கம் கூறப்படுகிறது.

கேப்டன், பயிற்சியாளர்

கேப்டன், பயிற்சியாளர்

2020 ஐபிஎல் தொடருக்கு முன் பஞ்சாப் அணியில் கேப்டனாக கேஎல் ராகுலும், பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவருமே கர்நாடக மாநில வீரர்கள். ஏற்கனவே அந்த அணியில் சில கர்நாடக வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.

கர்நாடக வீரர்கள் ஆதிக்கம்

கர்நாடக வீரர்கள் ஆதிக்கம்

கேஎல் ராகுல் தவிர்த்து, மயங்க் அகர்வால், கருண் நாயர், கிருஷ்ணப்பா கௌதம் என மூன்று கர்நாடக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று போட்டிகளில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் சிறப்பாகவே ஆடி வந்தனர். எனினும், கருண் நாயர் பார்ம் அவுட் ஆக இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

ரசிகர்கள் இணையத்தில் கர்நாடக அணியாக பஞ்சாப் மாறி வருவதாகவும், பஞ்சாப் மாநில வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார் கூறினர். இது போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி மாநில பிரச்சனையாக உருமாறியது. இதற்கு காரணம், கேப்டனும், பயிற்சியாளரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் என குற்றம் சாட்டினர்.

விசாரித்த உரிமையாளர்கள்

விசாரித்த உரிமையாளர்கள்

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பஞ்சாப் அணி உரிமையாளர்கள் தலையிட்டதாக கூறப்படுகிறது. பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவிடம் இது பற்றி விளக்கம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அணியை மாற்றினார் அனில் கும்ப்ளே.

அனில் கும்ப்ளே செய்த மாற்றம்

அனில் கும்ப்ளே செய்த மாற்றம்

சரியாக செயல்படாத கர்நாடக வீரர்கள் கிருஷ்ணப்பா கௌதம் மற்றும் கருண் நாயர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் இரண்டு பஞ்சாப் மாநில வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம். இந்த விவகாரத்தில் அனில் கும்ப்ளேவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஞ்சாப் வீரர்கள்

பஞ்சாப் வீரர்கள்

கிங்ஸ் லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ள அந்த இரண்டு பஞ்சாப் வீரர்கள் - மந்தீப் சிங் மற்றும் ஹர்ப்ரீத் பிரார். இவர்கள் கடந்த சீசன்களில் பஞ்சாப் அணிக்காக சில போட்டிகளில் ஆடியவர்கள். அவர்களுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Sunday, October 4, 2020, 23:24 [IST]
Other articles published on Oct 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+