Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. ஒரே ஓவர்தான்.. டெல்லி டீமை கதிகலங்க வைத்த கிறிஸ் கெயில்.. காப்பாற்றிய அஸ்வின்!!

துபாய் : கிறிஸ் கெயில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஒரே ஓவரில் டெல்லி அணியை பதற வைத்தார் கெயில். இந்த சீசனில் பவர்பிளே ஓவரில் அதிக ரன் எடுத்த சாதனையை பஞ்சாப் அணி செய்ய காரணமாக இருந்தார்.

அதற்கு அடுத்த ஓவரில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே டெல்லி அணி நிம்மதி அடைந்தது.

டெல்லி அணி

டெல்லி அணி

2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே ஆன போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி ரன் குவித்தார்.

ஸ்கோர்

ஸ்கோர்

ஷிகர் தவான் சதம் கடந்து 106 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.

ராகுல் அவுட்

ராகுல் அவுட்

அடுத்து டெல்லி அணி சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர் கேஎல் ராகுல் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கிறிஸ் கெயில் முதல் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து நிதான ஆட்டம் ஆடி இருந்தார்.

கெயில் ஆட்டம்

கெயில் ஆட்டம்

துஷார் தேஷ்பாண்டே வீசிய 5வது ஓவரை சந்தித்தார் கிறிஸ் கெயில். அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 4, 4, 6, 4, 4 என வரிசையாக ஐந்து பவுண்டரிகள் அடித்தார் கெயில். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தது.

அதிக ரன்

அதிக ரன்

2020 ஐபிஎல் தொடரில் ஒரே பவர்பிளே ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான். இந்த சாதனையை பஞ்சாப் அணி செய்ய முக்கிய காரணமாக இருந்கார் கிறிஸ் கெயில். ஆனால், அவரது அதிரடி ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

அஸ்வின் விக்கெட்

அஸ்வின் விக்கெட்

டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அடுத்த ஓவரின் 2வது பந்தில் கிறிஸ் கெயிலை பவுல்டு அவுட் ஆக்கினார். கிறிஸ் கெயில் 13 பந்துகளில் 29 ரன்கள் குவித்து இருந்தார். அதே ஓவரில் மற்றொரு விக்கெட்டும் வீழ்ந்தது.

2 விக்கெட்

2 விக்கெட்

அஸ்வின் வீசிய 6வது ஓவரின் 2வது பந்தில் கெயில் வீழ்ந்தார். அதே ஓவரின் 4வது பந்தில் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார், ரிஷப் பண்ட், அஸ்வின் சேர்ந்து அவரை ரன் அவுட் செய்தனர்.

Story first published: Tuesday, October 20, 2020, 23:16 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+