மீண்டும் வந்த அதிரடி வீரர்.. டாஸ் வென்ற டெல்லி அணியில் பரபர மாற்றம்!
துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்றது.
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் டாஸில் தோல்வி அடைந்தாலும் தான் முதலில் பந்து வீசவே நினைத்ததாக கூறினார்.

லீக் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி துபாயில் நடந்தது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் இந்த முடிவை எடுத்தது.

முக்கிய வீரர்
டெல்லி அணியில் முக்கிய வீரரான ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டும் அணியில் இடம் பெற்றார். அவர் கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவர் இல்லாதது இழப்பு என்றாலும் டெல்லி அணி அதை சமாளித்து வந்தது.

மூன்று மாற்றம்
டெல்லி அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. ரிஷப் பண்ட் உடன் டேனியல் சாம்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர் அணியில் இடம் பெற்றனர். டேனியல் சாம்ஸ்-க்கு இது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி மாற்றம்
பஞ்சாப் அணியில் கிறிஸ் ஜோர்டான் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டார். அவர் முன்பு பங்கேற்ற போட்டிகளில் ரன்களை வாரி இறைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பஞ்சாப் அணி அவரை மீண்டும் தேர்வு செய்தது.


Click it and Unblock the Notifications