Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவரை ஐபிஎல்-இல் இப்படி நடந்ததே இல்லை.. வரலாறு படைத்த தவான்.. மெர்சலான பஞ்சாப்!

துபாய் : ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்து ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு சாதனை நடந்ததே இல்லை. ஐபிஎல்-இல் வரலாறு படைத்துள்ள தவான், மற்றொரு முக்கிய சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார்.

பஞ்சாப் - டெல்லி போட்டி

பஞ்சாப் - டெல்லி போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 160 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இருப்பதால் அதை நோக்கி ஆடியது டெல்லி அணி.

விக்கெட்

விக்கெட்

டெல்லி அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 7, ஸ்ரேயாஸ் ஐயர் 14, ரிஷப் பண்ட் 14, ஸ்டோய்னிஸ் 9, ஹெட்மயர் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்த போதும் துவக்க வீரர் ஷிகர் தவான் நிலையாக ஆடினார்.

தவான் அதிரடி

தவான் அதிரடி

ஷிகர் தவான் 57 பந்துகளில் சதம் கடந்தார். அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 12 ஃபோர், 3 சிக்ஸ் அடித்தார். பஞ்சாப் அணியால் அவரை கடைசி வரை ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. அவர் ஆட்டத்தால் மட்டுமே டெல்லி அணி தப்பியது.

சாதனை

சாதனை

ஷிகர் தவான் அடித்த சதம் மூலம் சாதனை படைத்தார். இது 2020 ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம். அதுவும் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்துள்ளார் தவான். இதுவரை ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஒரு போட்டிகளில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை.

மைல்கல்

மைல்கல்

தொடர்ந்து இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்து வரலாறு படைத்த ஷிகர் தவான், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவதாக இணைந்தார். மேலும், ஒரு முக்கிய மைல்கல் ஒன்றையும் எட்டினார் தவான்.

5000 ரன்கள்

5000 ரன்கள்

ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் தவான். முன்னதாக விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர். இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது வீரர் ஆவார்.

பஞ்சாப் நிலை

பஞ்சாப் நிலை

தவான் அதிரடியால் பஞ்சாப் அணி நிலைகுலைந்தது. எனினும், மற்ற டெல்லி வீரர்கள் கை கொடுக்காததால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 106 ரன்கள் குவித்து இருந்தார்.

Story first published: Tuesday, October 20, 2020, 22:18 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+