Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் கேப்டன் பதவியை விட்டு போகணுமா? பஞ்சாப் போட்டியில் நடந்த சம்பவம்.. அதிர வைத்த தினேஷ் கார்த்திக்!

அபுதாபி : தினேஷ் கார்த்திக் பேட்டிங் குறித்து கடும் விமர்சனம் இருந்த அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.

கிங்ஸ் லெவன் பஞ்சா அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி சரிவில் இருந்து மீண்டது.

அவரை இதுவரை விமர்சித்து வந்த கூட்டம் அவரது ஆட்டத்தை பார்த்து வாயடைத்துப் போனது.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முழு பலத்துடன் இயான் மார்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் என சிறந்த பேட்ஸ்மேன், ஆல் - ரவுண்டர்களுடன் களமிறங்கியது. ஆனாலும், அந்த அணி ஐந்து போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்தது.

தினேஷ் கார்த்திக் பேட்டிங்

தினேஷ் கார்த்திக் பேட்டிங்

கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சொதப்பி வந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் பார்ம் அவுட் ஆகி விட்டார் என்றும், இயான் மார்கனுக்கு முன்பே பேட்டிங் இறங்க ஆசைப்படுகிறார் என்றும் கூறி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

ஐந்து போட்டிகளில்..

ஐந்து போட்டிகளில்..

தினேஷ் கார்த்திக் ஐந்து லீக் போட்டிகளில் 49 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். மும்பை அணிக்கு எதிராக 30 ரன்கள் எடுத்தது மட்டுமே இதில் அதிகம். ஒரு முறை டக் அவுட்டும் ஆகி இருந்தார். ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை என்ற விமர்சனமும் இருந்தது.

கேப்டன்சி மாற்றம்

கேப்டன்சி மாற்றம்

தினேஷ் கார்த்திக்கின் என முடிவுகள் தவறாக இருப்பதாகக் கூறி அவரை கேப்டன்சி பதவியில் இருந்து நீக்கி விட்டு, இங்கிலாந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ள இயான் மார்கனை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என விமர்சகர்கள் கூறி வந்தனர்.

பஞ்சாப் போட்டி

பஞ்சாப் போட்டி

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து தடுமாறி வந்தது. இயான் மார்கன் உட்பட 63 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் ஆடினார். அபுதாபி ஆடுகளம் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கவில்லை என கூறப்படும் நிலையில், அவர் அதிரடி ஆட்டம் ஆடினார். 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். 8 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து மிரள வைத்தார்.

மீண்ட கொல்கத்தா

மீண்ட கொல்கத்தா

20வது ஓவரின் கடைசி பந்தில் தான் அவர் ஆட்டமிழந்தார். அதுவரை களத்தில் நின்று அவர் ரன் குவித்ததால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தது.

பதிலடி

பதிலடி

தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்தாலே கடந்த போட்டிகளில் அவர் பதவி விலக வேண்டும், அணியில் இருந்தே நீக்கப்பட வேண்டும், பார்ம் அவுட் ஆன கேப்டன் என்றெல்லாம் விமர்சனம் செய்த அந்த கூட்டம், இந்த முறை கப்சிப் என அமைதியாக இருந்தது.

Story first published: Saturday, October 10, 2020, 19:13 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+