Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு மேல இழக்க ஒண்ணுமே இல்லை.. கதிகலங்கும் அணிகள்.. இதான் வெற்றி ரகசியம்.. பென் ஸ்டோக்ஸ்!

அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் என எதிர்பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

அந்த அணி கடினமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தொடர்ந்து 5 வெற்றிகளை குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளை வீழ்த்தி தன் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு பறிபோகாமல் தப்பித்துள்ளது.

இந்த இரண்டு வெற்றிகளுக்கும் முக்கிய காரணம் பென் ஸ்டோக்ஸ். அவர் முதல் சில போட்டிகளில் சுமாராக ஆடி வந்த நிலையில், தற்போது அதிரடியாக ஆடி தன் அணியை வெற்றி பெற வைத்து வருகிறார்.

ராஜஸ்தான் அணியின் நிலை

ராஜஸ்தான் அணியின் நிலை

2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும். அந்த நிலைக்கு சென்ற பின் தொடர்ந்து இரண்டு கடினமான போட்டிகளில் அந்த அணி வென்றது.

மும்பை போட்டி

மும்பை போட்டி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 196 ரன்களை சேஸிங் செய்ய வேண்டும் என்ற கடினமான சூழ்நிலையில் பென் ஸ்டோக்ஸ் 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார், இந்த சீசனில் அவரது சிறந்த ஆட்டமாக அது அமைந்தது.

பஞ்சாப் போட்டி

பஞ்சாப் போட்டி

அடுத்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தால் வெளியேற வேண்டும் என்றார் நிலையில், 186 ரன்களை சேஸிங் செய்த போது பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

பென் ஸ்டோக்ஸ் மேஜிக்

பென் ஸ்டோக்ஸ் மேஜிக்

பென் ஸ்டோக்ஸ் பல முறை இங்கிலாந்து அணியை இது போன்ற முக்கியமான போட்டிகளில் தன் மேஜிக்கால் வெற்றி பெற வைத்துள்ளார். இந்த முறை ஐபிஎல் தொடரில் அதே மேஜிக்கை செய்து வருகிறார். அது பற்றி அவர் பஞ்சாப் போட்டியின் வெற்றிக்கு பின் பேசினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் சீசனில் கிட்டத்தட்ட தோல்விக்கு அருகே உள்ளது. இனி இழக்க ஒன்றுமே இல்லை. இந்த நிலையில் இப்படி ஆடுவது தான் தேவை. சிக்ஸ் அடிப்பது இன்னும் அவசியம். மும்பை அணிக்கு எதிராக ஆடிய அதே மனநிலையில் இந்தப் போட்டியிலும் ஆடினேன் என்றார் பென் ஸ்டோக்ஸ்.

Story first published: Saturday, October 31, 2020, 6:53 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+