Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1001.. உச்சம் தொட்ட கிறிஸ் கெயில்.. எந்த வீரரும் தொட முடியாத ரெக்கார்டு.. வாயை பிளந்த ரசிகர்கள்!

அபுதாபி : கிறிஸ் கெயில் டி20 போட்டிகளில் யாரும் தொட முடியாத இமாலய சாதனை படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் 1000 சிக்ஸர் அடித்து, இமாலய சாதனை படைத்தார். இந்த சாதனையை செய்யும் முதல் வீரர் கிறிஸ் கெயில் தான்.

இனி வரும் காலங்களில் இந்த சாதனையை வேறு ஒரு வீரரால் செய்ய முடியுமா? என்ற வியப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த மெகா சாதனை.

பஞ்சாப் பேட்டிங்

பஞ்சாப் பேட்டிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ம,முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் மந்தீப் சிங் டக் அவுட் ஆன நிலையில் கிறிஸ் கெயில் களமிறங்கினார். ராகுல் நிதான ஆட்டம் ஆட, அவர் அதிரடி ஆட்டம் ஆடினார்.

கெயில் அதிரடி

கெயில் அதிரடி

கிறிஸ் கெயில் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ராஜஸ்தான் அணி தடுமாறியது. அவர் 6 ஃபோர், 8 சிக்ஸ் அடித்து மிரட்டினார். அவர் சிக்ஸ் வேட்டையை கண்டு மிரண்டாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தது ராஜஸ்தான் அணி.

99 ரன்கள்

99 ரன்கள்

கிறிஸ் கெயில் 20வது ஓவரில் சதத்தை நெருங்கிய நிலையில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிக்காதது ஏமாற்றம் என்றாலும் மற்றொரு இமாலய சாதனையை செய்து இருந்தார் கிறிஸ் கெயில். டி20 போட்டிகளில் 1000 சிக்ஸ் என்ற மைல்கல்லை கடந்திருந்தார்.

1001 சிக்ஸ்

1001 சிக்ஸ்

இந்தப் போட்டியில் 8 சிக்ஸ் அடித்த அவர் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 1001 சிக்ஸ் அடித்துள்ளார். இந்த சாதனையை வேறு எந்த வீரரால் தொட முடியும்? என்ற கேள்வி எழுந்தது. கெயிலுக்கு அடுத்து அதிக சிக்ஸ் அடித்துள்ள வீரர் 700 என்ற மைல்கல்லை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்களின் பட்டியல் -

கிறிஸ் கெயில் - 1001 சிக்ஸ்

கீரான் பொல்லார்டு - 690 சிக்ஸ்

பிரென்டன் மெக்குல்லம் - 485 சிக்ஸ்

ஷேன் வாட்சன் - 467 சிக்ஸ்

ஆண்ட்ரே ரஸ்ஸல் - 447 சிக்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ் - 417 சிக்ஸ்

Story first published: Friday, October 30, 2020, 22:54 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+