Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்கெட்ச் போட்டு அடித்த ஸ்டோக்ஸ், சாம்சன்.. சேஸிங் கிங்.. நிரூபித்த ராஜஸ்தான்.. பஞ்சாப் படுதோல்வி!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் தங்கள் அணி தான் சேஸிங் கிங் என நிரூபித்தது.

மேலும், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் தன் பிளே-ஆஃப் வாய்ப்பை அதிகரித்தது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது ராஜஸ்தான் அணி. அதே போல, பஞ்சாப் அணி இரண்டாவதாக பந்து வீச முடியாமல் தடுமாறி தோல்வி அடைந்தது.

கெயில் அதிரடி

கெயில் அதிரடி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பெரிய அளவில் ரன் குவித்து பெரிய ஸ்கோர் அடிக்க உதவினார் கிறிஸ் கெயில். அவர் 63 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார். 6 ஃபோர், 8 சிக்ஸ் அடித்தார். ராகுல் 46 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 10 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார்.

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்ற நிலையில், இந்த ஸ்கோர் போதுமானதாக இருக்காது என்றே கருதப்பட்டது. அதே போலவே நடந்தது.

ராஜஸ்தான் பரபர சேஸிங்

ராஜஸ்தான் பரபர சேஸிங்

ராஜஸ்தான் அணி சேஸிங்கில் துவக்கம் முதலே வெற்றியை குறி வைத்து ஆடியது. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அதிரடி ஆட்டம் ஆடி ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.

ஸ்டோக்ஸ், சாம்சன்

ஸ்டோக்ஸ், சாம்சன்

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடினர். ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். அவர்கள் ஆட்டமிழந்த பின் ஸ்டீவ் ஸ்மித் 31, பட்லர் 22 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.

வெற்றி

வெற்றி

17.3 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே அணியை தவிர அனைத்து அணிகளுக்கும் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு தக்க வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, October 30, 2020, 23:49 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+