Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs RR : கடைசி வாய்ப்பு.. தோற்றால் சிஎஸ்கே நிலைமை தான்.. டாஸ் ஜெயித்த ஸ்டீவ் ஸ்மித்!

அபுதாபி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்றது,

ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும்.

இந்த நிலையில், அந்த அணி டாஸ் வென்று தனக்கு சாதகமான முடிவை எடுத்தது. எனினும், பஞ்சாப் அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது.

பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டி

பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டி

பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இடையே ஆன 50வது ஐபிஎல் லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச்சில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரண்டாம் பாதியில் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும் என கருதப்பட்டது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்த நிலையில், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் தாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பியதாக கூறினார். எனினும், பிட்ச் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கும் என்பதால் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சிஎஸ்கே நிலை

சிஎஸ்கே நிலை

இந்தப் போட்டியில் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். சிஎஸ்கே அணியுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த இரண்டாவது அணியாக இணைய வேண்டிய நிலை ஏற்படும். சிஎஸ்கே முதல் அணியாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் அணியில் வருண் ஆரோன் அணியில் வாய்ப்பு பெற்றார். கடந்த போட்டிகளில் ரன்களை வாரி இறைத்த அங்கித் ராஜ்புத் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Story first published: Friday, October 30, 2020, 19:40 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+