Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெயில் புயல்.. சின்னாபின்னமான ராஜஸ்தான்.. சமாளித்த ஆர்ச்சர், ஸ்டோக்ஸ்.. ஸ்மித் சொதப்பல்!

அபுதாபி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விளாசித் தள்ளினார் கிறிஸ் கெயில்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே ஆன லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் குவித்தது.

மந்தீப் சிங் டக் அவுட்

மந்தீப் சிங் டக் அவுட்

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு மந்தீப் சிங், கேஎல் ராகுல் துவக்கம் அளித்தனர். மந்தீப் சிங் தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆனார்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

அடுத்து கிறிஸ் கெயில் களமிறங்கினார். அவர் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தார். ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து நிதான ஆட்டம் ஆடினார். ராகுல் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

99 ரன்களுக்கு அவுட்

99 ரன்களுக்கு அவுட்

நிக்கோலஸ் பூரன் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸ் அடித்து இருந்தார். கிறிஸ் கெயில் சதத்தை நோக்கி நெருங்கிய நிலையில் கடைசி ஓவரில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் 6 ஃபோர், 8 சிக்ஸ் அடித்து இருந்தார்.

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் ஸ்கோர்

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே ஆறுதல் அளித்தனர்.

ஸ்மித் மீது விமர்சனம்

ஸ்மித் மீது விமர்சனம்

ஆர்ச்சர் 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஸ்டோக்ஸ் 32 ரன்கள் கொடுத்தாலும் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஸ்டீவ் ஸ்மித் கெயிலை வீழ்த்த தொடர்ந்து ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஓவர்களை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

Story first published: Friday, October 30, 2020, 22:13 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+