Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த டீமை வைச்சுகிட்டு பிளே-ஆஃப் எல்லாம் நினைச்சு கூட பார்க்கக் கூடாது.. வறுத்து எடுத்த ரசிகர்கள்!

அபுதாபி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

ஜோப்ரா ஆர்ச்சர் மட்டுமே பந்துவீச்சில் மிரட்டினார். மற்ற பந்துவீச்சாளர்கள் பெரிதாக எடுபடவில்லை.

குறிப்பாக பவர்பிளே ஓவர்களிலும், கடைசி ஓவர்களிலும் ஆர்ச்சரை மட்டுமே நம்பி உள்ளது ராஜஸ்தான்.

நடக்கவே நடக்காது

நடக்கவே நடக்காது

பஞ்சாப் போட்டியில் ஆர்ச்சர் முதல் இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அவர் சென்ற பின் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு பலவீனமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு ராஜஸ்தான் அணியால் பிளே-ஆஃப் போவதெல்லாம் நடக்கவே நடக்காது என ரசிகர்கள் விளாசினர்.

பிளே-ஆஃப் வாய்ப்பு

பிளே-ஆஃப் வாய்ப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் பஞ்சாப் அணியை சந்தித்தது. டாஸ் வென்று பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் மந்தீப் சிங் தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவரது அச்சுறுத்தலான பந்துவீச்சு முடிந்த பின் பஞ்சாப் அதிரடி ஆட்டத்துக்கு மாறியது.

கெயில் - ராகுல் ஜோடி

கெயில் - ராகுல் ஜோடி

கேஎல் ராகுலுடன், கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக சிக்ஸ், ஃபோர் அடித்து மிரட்டினர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆர்ச்சர் இரண்டு ஓவர்களை வீசிய பின் கடைசி ஓவர்களுக்கு அவர் தேவை என அவருக்கு ஓவர் கொடுக்கவில்லை

ஆர்ச்சர் வீசி இருக்க வேண்டும்

ஆர்ச்சர் வீசி இருக்க வேண்டும்

மற்ற வேகப் பந்துவீச்சாளர்களான வருண் ஆரோன் மற்றும் கார்த்திக் தியாகி ரன்களை வாரி இறைத்தனர். அப்போது ஆபத்தான கெயில் விக்கெட்டை வீழ்த்த தொடர்ந்து தன் மூன்றாவது ஓவரை ஆர்ச்சர் வீசி இருக்க வேண்டும் என்ற கருத்து விமர்சகர்களால் கூறப்பட்டது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

வெறும் ஆர்ச்சரை மட்டுமே விக்கெட் வீழ்த்த நம்பி இருப்பதால் தான் ராஜஸ்தான் அணிக்கு இந்த நிலை என ரசிகர்கள் அந்த அணியை விளாசினர். அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் அந்த அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியாது எனவும் விமர்சனம் செய்தனர்.

பஞ்சாப் ரன் குவிப்பு

பஞ்சாப் ரன் குவிப்பு

பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் அதிரடியாக ரன் குவித்தது. கிறிஸ் கெயில் சிக்ஸ் மழை பொழிந்தார். ராகுல் 46 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 10 பந்துகளில் 22 ரன்கள் குவித்தார். அவர் 3 சிக்ஸ் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 30, 2020, 21:43 [IST]
Other articles published on Oct 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+