Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த டீம் தேறவே தேறாது.. பஞ்சாப் அணி செய்த காரியம்.. நம்பிக்கை இழந்த ரசிகர்கள்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

துபாயில் நடந்த இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி படுமோசமாக பேட்டிங் செய்தது. அந்த அணி மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழந்தனர்.

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 43வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தோற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பு கடும் சிக்கலாக மாறும் என்ற நிலையில் இரு அணிகளும் பங்கேற்றன.

நல்ல துவக்கம்

நல்ல துவக்கம்

ஹைதராபாத் அணி டாஸ் வென்று, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. பஞ்சாப் அணியில் காயம் காரணமாக மயங்க் அகர்வால் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் மந்தீப் சிங் துவக்கம் அளித்தார். ராகுல் - மந்தீப் நல்ல துவக்கம் அளித்தனர்.

மந்தமான ஆட்டம்

மந்தமான ஆட்டம்

5 ஓவர்களில் பஞ்சாப் அணி 37 ரன்கள் எடுத்த நிலையில் மந்தீப் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெயில் பந்துகளை வீணடிக்கத் துவங்கினார். ராகுலும் நிதான ஆட்டம் ஆடினார். ரன் ரேட் சரிவால் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விக்கெட்கள் சரியத் துவங்கின.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

ராகுல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயில் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். மேக்ஸ்வெல் 12, ஹூடா 0, கிறிஸ் ஜோர்டான் 7, முருகன் அஸ்வின் 4 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

பூரன் போராட்டம்

பூரன் போராட்டம்

நிக்கோலஸ் பூரன் தனி ஆளாக அணியை காக்க போராட்டம் நடத்தினார். அவருக்கு யாரும் ஒத்துழைக்காத நிலையில் அவரும் தற்காப்பு ஆட்டத்தை ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் நிக்கோலஸ் பூரன்.

மோசமான ஸ்கோர்

மோசமான ஸ்கோர்

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஐபிஎல் சீசனில் துபாயில் நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுத்த குறைந்த ஸ்கோர் இதுதான். இதை அடுத்து ஹைதராபாத் அணிக்கு சாதகமாக போட்டி மாறியது.

நம்பிக்கை இழந்த ரசிகர்கள்

நம்பிக்கை இழந்த ரசிகர்கள்

பஞ்சாப் அணி கடந்த மூன்று போட்டிகளில் மூன்று முக்கிய அணிகளை வீழ்த்தி இருந்ததால், இந்த அணி தான் பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆதரித்து வந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் மோசமாக ஆடியதால் பஞ்சாப் அணி மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

ரஷித் கான் மிரட்டல்

ரஷித் கான் மிரட்டல்

ஹைதராபாத் அணியில் ரஷித் கான் மிரட்டலாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் சர்மா 2, ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினர். தமிழக வீரர் நடராஜன் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

Story first published: Saturday, October 24, 2020, 22:24 [IST]
Other articles published on Oct 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+