KXIP vs SRH : தப்பே செய்யாத வீரரை கழட்டி விட்ட வார்னர்.. ராகுலும் அதே வேலையை செய்தார்!
துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி துபாயில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளும் தங்கள் அணிகளில் மாற்றங்களை செய்தனர்.
எந்த தவறும் செய்யாத வீரர்களை நீக்கி, புதிய வீரர்களை சேர்த்து அணியை மாற்றி இருந்தனர். வெற்றிக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இரு அணிகளும் இப்படி மாற்றங்களை செய்தன. நியூசிலாந்து வீரர் ஒருவரும் இதில் பாதிக்கப்படட்டார்.

டாஸ் வெற்றி
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்றார். அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியின் பின்பாதி முடிவில் பனிப்பொழிவு இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

ஹைதராபாத் அணி மாற்றம்
ஹைதராபாத் அணியில் ஷாபாஸ் நதீம் நீக்கப்பட்டு, கலீல் அஹ்மது அணியில் சேர்க்கப்பட்டார். சுழற் பந்துவீச்சாளருக்கு பதில் வேகப் பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும், எந்த தவறும் செய்யாத நதீம் மீண்டும் அணியில் வாய்ப்பை இழந்தார்.

பஞ்சாப் மாற்றம்
பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், ஜிம்மி நீஷம் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் மந்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் அணியில் வாய்ப்பு பெற்றனர். மயங்க் அகர்வால் காயம் காரணமாக நீக்கப்பட்டார். ஆனால், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் நீஷம் எந்த காரணமும் இன்றி நீக்கப்பட்டார்.

நீஷம் பாவம்
ஜிம்மி நீஷம் முன்னதாக மோசமான பந்துவீச்சால் நீக்கப்பட்டு கடந்த போட்டியில் அணிக்கு திரும்பினார். இந்த முறை அவர் நீக்கப்பட்டு சென்ற போட்டியில் காரணமே இன்றி வாய்ப்பை இழந்த கிறிஸ் ஜோர்டான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications