
பாதிக்கப்பட்ட சிஎஸ்கே பயிற்சி
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கடந்த 21ம் தேதி யூஏஇக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் புறப்பட்டு சென்றனர். மற்ற அணி வீரர்களை போல இவர்களும் குவாரன்டைனில் இருந்த நிலையில், அணியின் இரு வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அணியின் பயிற்சி உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கப்பட்டன.

வைரலான வீடியோ
இந்நிலையில் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட 3 டெஸ்ட்களில் கொரோனா நெகட்டிவ் வந்ததையடுத்து அணியின் இரு வீரர்களை விடுத்து மற்ற வீரர்கள் கடந்த இரு தினங்களாக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று ஆடி வருகின்றனர். இந்த பயிற்சியின்போது பியூஷ் சாவ்லாவின் பந்தை அடித்து ஆடி சிக்ஸ்க்கு தட்டிய தோனியின் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

குறைந்த பௌலர்களின் எண்ணிக்கை
சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாகவே உள்ளது. ஆனால் பௌலர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அந்த அணி போட்டிகளை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபக் சஹர் உள்ளிட்ட தமிழ்நாடு நெட் பௌலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குவாரன்டைனில் உள்ளனர். அணியின் மற்ற பௌலர்கள் டிவைன் பிராவோ மற்றும் ஜோஷ் ஹாசல்வுட் கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் மும்முரமாக உள்ளனர்.

சிறப்பான ஸ்பின்னர்கள்
சாம் குர்ரான் இன்னும் துபாய்க்கு வராத நிலையில், கடந்த 1ம் தேதி துபாய் வந்த தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி குவாரன்டைனில் உள்ளார். தற்போது ஷர்துல் தாக்கூர் மற்றும் கே.எம். ஆஷிப் ஆகியோர் அணியில் உள்ள நிலையில், பௌலிங் மிகவும் மெதுவாகவே வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுவரும் நிலையில் ஸ்பின்னர்களும் தங்களை தகவமைத்துக் கொள்வதில் சிரமப்படவில்லை என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











