
உலகம் முழுவதும் பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல மடங்காக பெருகி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 17, லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பல நாடுகளில் இறப்பு எண்ணிக்கையை சரியாக எண்ண முடியாத அளவுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களில் அதிகரித்து இருக்கிறது. 7,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் மக்கள் இடையே பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல்
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாத மத்தியில் தள்ளி வைக்கப்பட்டது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பும் ஐபிஎல் தொடர் துவங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

பிசிசிஐ திட்டம்
எனினும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என பிசிசிஐ திட்டம் வகுத்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

ரிஸ்க் எடுக்கக் கூடாது
இந்த நிலையில், முன்னாள் வீரர் மதன் லால் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் யாரும் ரிஸ்க் எடுக்கக் கூடாது எனவும், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் ஐபிஎல்-ஐ நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் கூறி உள்ளார்.

எச்சரிக்கை
"ஐபிஎல் பெரிய பிராண்ட். ஆனால், கிரிக்கெட் போர்டு, நிலைமை முன்னேறினால், கொரோனா வைரஸ் மொத்தமாக போய் விட்டாலோ தான் முடிவு எடுக்க முடியும். தற்சமயம், அது பரவிக் கொண்டுள்ளது. எனவே, யாரும் ரிஸ்க் எடுக்கக் கூடாது" என எச்சரிக்கை விடுத்தார் மதன் லால்.

அவர்களையும் பார்க்க வேண்டும்
மேலும், "காலியான மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை ஆடுவதில் அர்த்தமே இல்லை. இது வீரர்கள், ரசிகர்கள் பற்றிய பயம் மட்டுமல்ல, பயணம், ஒருங்கிணைப்பு, ஒளிபரப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என மதன் லால் பிசிசிஐக்கு கூறி உள்ளார்.

லாக்டவுன்
தற்போது, இந்தியாவில் லாக்டவுன் நாட்கள் மேலும் நீடிக்கப்படும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால், ஐபிஎல் தொடரையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்க பிசிசிஐ திட்டம் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவரை சாத்தியமே அல்ல
எப்படியும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் ஐபிஎல் தொடரை நடத்துவது சாத்தியமே அல்ல. மேலும், மக்கள் கிரிக்கெட் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்கும் மன நிலையில் இல்லை என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications