Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி.. ஆடின வரை போதும்.. தெரியாம டீம்ல எடுத்துட்டோம்.. முன்னாள் சாம்பியனை தூக்கி எறிந்த ஸ்மித்

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.

அதில் அதிரடி முடிவாக டி20 ஸ்பெஷலிஸ்ட் ராபின் உத்தப்பாவும் நீக்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்த ஆண்டே மிக மோசமாக பேட்டிங் செய்த நிலையில், அவரை வம்படியாக வாங்கி சூடு வைத்துக் கொண்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ராபின் உத்தப்பா இடம் பெற்று இருந்தார். அதிரடி பேட்ஸ்மேனாக அடையாளம் காணப்பட்ட அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். ஆனால், இடையே பார்ம் அவுட் ஆகி இந்திய அணியில் இடத்தை இழந்து, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி வந்தார்.

மங்கிய பார்ம்

மங்கிய பார்ம்

ஐபிஎல் தொடரிலும் கடந்த 2019 சீசனில் அவரது பார்ம் மங்கியது. அவரால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. நிறைய டாட் பால் ஆடி தான் ஆடி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சில தோல்விகளுக்கு காரணமாக இருந்தார்.

கை கழுவிய கொல்கத்தா

கை கழுவிய கொல்கத்தா

அணியின் துணை கேப்டனாக இருந்த அவர் நடுவே கேப்டன் தினேஷ் கார்த்திக் உடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த தொடரின் முடிவில் கொல்கத்தா அணி அவரை வெளியேற்றியது. ஏலத்தில் மீண்டும் தன் பெயரை சேர்த்தார் உத்தப்பா.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

அவரை யாருமே வாங்க மாட்டார்கள் என நினைத்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை அனுபவ வீரர் என்ற அடிப்படையில் வாங்கியது. அப்போதே அது தவறான முடிவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 2020 சீசனில் ராபின் உத்தப்பா அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடினார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

முதல் இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதால் உத்தப்பா அந்த போட்டிகளில் 5 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்தது பெரிதாக தெரியவில்லை. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்த நிலையில், அந்தப் போட்டியில் அவர் 2 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பாக பார்க்கப்பட்டது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இந்த நிலையில், அனுபவ வீரர் என்றாலும் மோசமான பார்ம் அவுட் ஆகி இருக்கும் ராபின் உத்தப்பாவை நீக்கி உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி., மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உத்தப்பா உட்பட மூன்று வீரர்களை நீக்கி விட்டு மூன்று இளம் வீரர்களை ராஜஸ்தான் அணி ஆட வைத்தது.

இனி வாய்ப்பு கிடைக்காது

இனி வாய்ப்பு கிடைக்காது

ராபின் உத்தப்பா 2008 ஐபிஎல் தொடர் முதல் 13 ஆண்டுகளாக ஆடி வந்தாலும் பார்ம் அவுட் ஆகி இருப்பதால் இனி இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடைசி ஐபிஎல்

கடைசி ஐபிஎல்

ஏற்கனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதலில் ஈடுபட்ட அவர், பேட்டிங்கிலும் மோசமான பார்மில் இருப்பதால் இனி ஐபிஎல் தொடரில் இருந்தும் கூட அவர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. 2020 ஐபிஎல் அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம்.

Story first published: Tuesday, October 6, 2020, 21:44 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+