Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் என்னா மாதிரி பிளேயர் தெரியுமா? ஆனா யாருமே கண்டுக்க மாட்டேங்குறாங்க.. புகழ்ந்து தள்ளிய கம்பீர்

டெல்லி : 2020 ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில், சிறந்த டி20 வீரர்கள பற்றிய விவாதம் நடந்து வருகிறது.

முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் சிறந்த டி20 வீரர் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு அவரை யாருமே சரியாக கண்டு கொள்வதில்லை என தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வீரர் தரமான ஆல்-ரவுண்டர் என்றும், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்றவர்களுக்கு இணையானவர் என்றும் கூறினார்.

ஐபிஎல் வீரர்கள்

ஐபிஎல் வீரர்கள்

ஐபிஎல் தொடரில் ஆடி பிரபலம் ஆன கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால் மட்டுமே சிறந்த டி20 வீரர்கா ஒப்புக் கொள்ளப்படும் வீரர்களும் உண்டு. ஆனால், ஒரு வீரர் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை.

கம்பீர் சொன்ன வீரர்

கம்பீர் சொன்ன வீரர்

கவுதம் கம்பீர் சொல்லும் அந்த வீரர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் முகமது நபி. அவர் ஆப்கானிஸ்தான்அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். நீண்ட அனுபவம் கொண்ட வீரர். உலகம் முழுவதிலும் பல்வேறு டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் அவர் பங்கேற்று வருகிறார்.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 ஐபிஎல் தொடருக்கு முன் அவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் 156 ரன்களும், 12 விக்கெட்களும் வீழ்த்தி பல போட்டிகளில் தன் அணியை தனியாக கரை சேர்த்தார்.

எல்லாமே செய்வார்

எல்லாமே செய்வார்

அவரைப் பற்றி குறிப்பிட்ட கம்பீர், அவர் டி20 கிரிக்கெட்டில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் என்றும், அவர் சிறந்த பீல்டர், 4 ஓவரும் பந்து வீசுவார், முதல் ஆறு ஓவர்களில் பந்து வீசும் திறன் வாய்ந்தவர், 5 அல்லது 6வது இடத்தில் பேட்டிங் செய்வார் என அவரது திறன் பற்றி பாராட்டினார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்

ஆண்ட்ரே ரஸ்ஸல் பற்றி பேசுகிறோம். ஆனால், அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அதற்கு அருகே இருக்கும் தரமான ஆல் - ரவுண்டர் தான் முகமது நபி. அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறார். அங்கே அதிக கிரிக்கெட் ஆடுவதில்லை என்பதால் அவரை யாரும் கண்டு கொள்வதில்லை என்றார் கம்பீர்.

சன்ரைசர்ஸ் ஹைதராத் அணியில்..

சன்ரைசர்ஸ் ஹைதராத் அணியில்..

அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோ, ரஷித் கான், கேன் வில்லியம்சன் என நட்சத்திர வீரர்கள் இருப்பதால் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என அவரது மதிப்பு குறைவாக உள்ளதற்கான காரணத்தை விளக்கினார்.

வேறு அணிக்கு ஆடினால்..

வேறு அணிக்கு ஆடினால்..

அதே நபி வேறு அணிக்கு ஆடி, 14 போட்டிகளிலும் ஆடினால் அவரது முழுமையான தாக்கத்தை நாம் உணர்வோம் என்றார் கவுதம் கம்பீர். நபி நல்ல பார்மில் இருப்பதால் இந்த ஆண்டு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, September 13, 2020, 20:02 [IST]
Other articles published on Sep 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+