Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிக சிக்ஸ் அடிச்சது இவரா? சர்வதேச வீரர்களை ஓட விட்ட இளம் வீரர்.. அதிர வைக்கும் பட்டியல்!!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் அதிக சிக்ஸ் அடித்த வீரராக இருப்பவர் சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு பெறாத இந்திய வீரர்.

ஆம், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் தான் அவர். அவருக்கு பின் தான் சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

2020 ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கான தொடராக இருந்தது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவு இளம் வீரர்கள் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு அனுபவ, சர்வதேச வீரர்களை ஓரங்கட்டினர். அதிக சிக்ஸ், ஃபோர் அடித்த வீரர்கள் பட்டியலிலும் அவர்களே முன்னிலையில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணியின் ஏற்றிக்கு மிக முக்கிய காரணம் இரண்டு உள்ளூர் வீரர்கள். ஒருவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், மற்றொருவர் சூர்யகுமார் யாதவ்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இஷான் கிஷன் இந்த சீசனில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளார். அவர் 13 போட்டிகளில் 29 சிக்ஸ் அடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 60 ஃபோர் அடித்து அதிக ஃபோர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

அதிக சிக்ஸ் பட்டியல்

அதிக சிக்ஸ் பட்டியல்

அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியல் -

  • இஷான் கிஷன் - 13 போட்டிகள் - 29 சிக்ஸ்
  • சஞ்சு சாம்சன் - 14 போட்டிகள் - 26 சிக்ஸ்
  • ஹர்திக் பாண்டியா - 13 போட்டிகள் - 25 சிக்ஸ்
  • நிக்கோலஸ் பூரன் - 14 போட்டிகள் - 25 சிக்ஸ்
  • இயான் மார்கன் - 14 போட்டிகள் - 24 சிக்ஸ்
அதிக ஃபோர் பட்டியல்

அதிக ஃபோர் பட்டியல்

அதிக ஃபோர் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டு உள்ளூர் வீரர்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

  • சூர்யகுமார் யாதவ் - 15 போட்டிகள் - 60 ஃபோர்
  • கேஎல் ராகுல் - 14 போட்டிகள் - 58 ஃபோர்
  • ஷிகர் தவான் - 14 போட்டிகள் - 58 ஃபோர்
  • டேவிட் வார்னர் - 15 போட்டிகள் - 52 ஃபோர்
  • தேவ்தத் படிக்கல் - 15 போட்டிகள் - 51 ஃபோர்
Story first published: Saturday, November 7, 2020, 16:49 [IST]
Other articles published on Nov 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+