Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா நடக்கணும்! ஆண்டவனை நம்பும் கொல்கத்தா.. மும்பை தோற்றால் சோலி முடிஞ்சது.. ஐபிஎல் பரபரப்பு!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இதுவரை இல்லாத அளவு பரபரப்பாக மாறி இருக்கிறது.

இந்த சீசனின் கடைசி லீக் போட்டி எந்த அணி கடைசியாக பிளே-ஆஃப் செல்ல உள்ளது என்பத தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக மாறி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும்.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு நடந்து வருகிறது. 56 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை தகுதி

மும்பை தகுதி

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்து, முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியை அடுத்து எந்த அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது வந்தது.

பெங்களூர் - டெல்லி ட்விஸ்ட்

பெங்களூர் - டெல்லி ட்விஸ்ட்

லீக் சுற்றின் 55வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெல்லும் அணி இரண்டாம் இடம் பெறும் என்ற நிலை இருந்தது. தோற்கும் அணி குறிப்பிட்ட அளவு ரன் குவித்தால் அல்லது எதிரணியை விரைவாக வெற்றி பெறாமல் பார்த்துக் கொண்டால் பிளே-ஆஃப் சுற்றுக்கு ,முன்னேறும் நிலை இருந்தது.

கடைசி போட்டி

கடைசி போட்டி

அதன் படி, பெங்களூர் - டெல்லி என் இரு அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இது எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. இந்த நிலையில், கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதில் ஹைதராபாத் அணி வென்றால் 14 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி பிளே-ஆஃப் செல்லும்.

கொல்கத்தா நிலை

கொல்கத்தா நிலை

கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணியை விட குறைவாக இருப்பதால், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து 14 புள்ளிகள் பெறாமல் இருந்தால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஆண்டவன் தான் காப்பாத்தணும்

ஆண்டவன் தான் காப்பாத்தணும்

இதைப் பற்றி அறிந்தே கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் தங்கள் அணியின் கடைசி லீக் போட்டியின் முடிவில் தங்கள் அணி முடிந்ததை செய்து விட்டோம். இனி ஆண்டவன் கையில் தான் எல்லாம் உள்ளது என்றார்.

Story first published: Tuesday, November 3, 2020, 1:36 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+