Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே vs மும்பை இல்லை.. ஓபனிங் மேட்ச்சில் மாற்றம்.. கோலியுடன் மோதும் தமிழக கேப்டன்? கசிந்த தகவல்

துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியிடுவதை பிசிசிஐ தாமதப்படுத்தி வருகிறது.

முன்னதாக செப்டம்பர் 4 அன்று 2020 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறி இருந்தார்.

தற்போது ஐபிஎல் அட்டவணை செப்டம்பர் 6 அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், முதல் போட்டியில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

13வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அனைத்து ஐபிஎல் அணிகளும் ஒரு மாதம் முன்னதாக அங்கே கிளம்பிச் சென்றன.

நகரங்கள்

நகரங்கள்

அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா என மூன்று நகரங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதிமுறைகள் துபாய், அபுதாபி இடையே வேறுபடுகிறது. துபாயில் இருந்து அபுதாபி செல்பவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவுடன் தான் வர முடியும்.

கங்குலி என்ன சொன்னார்?

கங்குலி என்ன சொன்னார்?

இந்த சிக்கலால் இரு நகரங்களில் மாறி, மாறி போட்டிகளை நடத்த முடியாத இக்கட்டில் இருந்தது பிசிசிஐ. அதனால், ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி போட்டி அட்டவணை செப்டம்பர் 4 அன்று வெளியாகும் என்றார்.

சிஎஸ்கேவால் தாமதம்

சிஎஸ்கேவால் தாமதம்

அந்த நாளில் அனைவரும் ஐபிஎல் அட்டவணையை எதிர்பார்த்து ஏமாந்தனர். தற்போது செப்டம்பர் 6 அன்று ஐபிஎல் அட்டவணை வெளியாகும் என ஐபிஎல் நிர்வாகக் கமிட்டி தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் சில வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் இந்த தாமதத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மும்பை - சிஎஸ்கே

மும்பை - சிஎஸ்கே

அதே காரணத்தால், இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத இருந்த திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேறு இரு அணிகள் முதல் போட்டியில் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூர் - கொல்கத்தா

பெங்களூர் - கொல்கத்தா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முதல் போட்டியில் மோத அதிக வாய்ப்பு உள்ளதாக ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. செப்டம்பர் 5 அன்று ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் வெளியான புகைப்படத்தை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அந்த புகைப்படம்

அந்த புகைப்படம்

அந்த புகைப்படத்தில் இன்னும் ஐபிஎல் தொடருக்கு 14 நாட்களே உள்ளன என குறிப்பிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி இடம் பெற்று இருந்தனர்.

முதல் போட்டியில்..

முதல் போட்டியில்..

அதை வைத்தே 2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூர் அணிகள் மோத இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஐபிஎல் அட்டவணை வெளியான பின்பே இது குறித்து தெரிய வரும். சிஎஸ்கே அணி சில நாட்கள் தாமதமாக தன் முதல் போட்டியில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, September 5, 2020, 17:37 [IST]
Other articles published on Sep 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+