Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வலியெல்லாம் போயே போச்சு... அடுத்த அதிரடிக்கு தயாராகும் அஸ்வின்

ஷார்ஜா : நேற்று முன்தினம் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், சிங்கிள்ஸ் ஒன்றை தடுக்கப்போய் தோள்பட்டையில் காயத்தை வாங்கினார்.

IPL 2020: Pain has settled down now -Ashwin says

அஸ்வின் அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், தற்போது தன்னுடைய வலி நீங்கியுள்ளதாகவும் ஸ்கேன் ரிப்போர்ட்டும் திருப்திகரமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில், அதில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு, டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் புதிதாக இணைந்துள்ள ஆர் அஸ்வின் தான் போட்ட ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரின் இறுதி பந்தில் ஒரு ரன்னை தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி விபரீதமானது. அதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

IPL 2020: Pain has settled down now -Ashwin says

இதையடுத்து அடுத்த போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அணியின் கோச் ரிக்கி பாண்டிங்கும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய வலி நீங்கியுள்ளதாகவும் ஸ்கேன் ரிப்போர்ட்டும் திருப்திகரமாக உள்ளதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, September 22, 2020, 16:33 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+