இகழ்வாக பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்... நச்சுன்னு பதிலடி கொடுத்த பார்திவ் படேல்
Recommended Video
பெங்களூரு : இந்திய வீரர் பார்திவ் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2020 தொடருக்காக தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான டீன் ஜோன்சுக்கு பார்திவ் அதிரடி பதிலளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பேட்டிங் செய்த பார்திவ் படேல் 373 ரன்களை குவித்தார். அந்த அணி 5 வெற்றிகளுடன் பட்டியலில் இறுதி இடத்தை பிடித்த நிலையில், பார்த்திவின் இந்த ரன் அணிக்கு, ஓரளவிற்கு நல்ல பெயரை கொடுத்திருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக பார்திவ் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அணியின் இந்த முடிவு குறித்து டீன் ஜோன்ஸ் கேள்வி எழுப்பினார். அவருக்கு பார்திவ் பதிலடி கொடுத்தார்.

அணிக்கு நிலைத்தன்மையை வழங்கிய பார்திவ்
கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பட்டியலில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று இறுதி இடத்தை பிடித்திருந்தது. ஆயினும் அணியின் துவக்க ஆட்டக்காரர் பார்திவ் படேல், 373 ரன்களை குவித்து அணியின் உரிமையாளருக்கு நிம்மதியை அளித்திருந்தார்.

"இன்னும் வைத்திருக்கிறீர்களா?"
ஆர்சிபி-யின் இந்த முடிவு குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆட்டக்காரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார். அணியில் இன்னும் பார்திவ் படேலை வைத்திருக்கிறீர்களா என்று டிவிட்டர் மூலம் அவர் கேட்டிருந்தார்.

"அமைதியாக வர்ணனை செய்ய முடியும்"
தன்னை இழிவுப்படுத்தி பேசிய டீன் ஜோன்சின் இந்த கேள்விக்கு தற்போது பார்திவ் படேல் அமைதியான மற்றும் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார். ஆர்சிபியின் இந்த தேர்வு மூலம் டீன் ஜோன்ஸ் அமைதியான முறையில் தன்னுடைய வர்ணனையை தொடர முடியும் என்று அவர் பதில் கொடுத்துள்ளார்.

ஐபிஎல்லின் சிறப்பான ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள பார்திவ் படேல், கடந்த 2014ல் ஆர்சிபிக்காக ஆடியவர். பின்பு மீண்டும் 2018 முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

2848 ரன்கள் குவிப்பு
இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள 34 வயதான பார்திவ் படேல், 2,848 ரன்களை குவித்துள்ளார். அதிகப்படியாக 81 ரன்களை எடுத்துள்ள அவர், 13 அரைசதங்களை அடித்துள்ளார்.

அட்டவணையில் கடைசி இடம்
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில், அந்த பட்டத்தை ஒருபோதும் ஆர்சிபி அணி வென்றதில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஐந்து வெற்றிகளுடன் இறுதி இடத்தை பிடித்த அந்த அணி, அடுத்த சீசனிலாவது வெற்றிக்கனியை பெறவேண்டும் என்ற முனைப்புடன் வீரர்களை தேர்வு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications