For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ரன்களில் சிஎஸ்கேவை தூக்கிய கேகேஆர்... புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேற்றம்

அபுதாபி: ஐபிஎல்லின் 21வது போட்டி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இதில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியை அடுத்து 6வது இடத்தில் இருந்த சிஎஸ்கேவும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

167 ரன்கள் அடித்த கேகேஆர்

167 ரன்கள் அடித்த கேகேஆர்

ஐபிஎல்லின் 21வது போட்டி நேற்று துபாயில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய கேகேஆர் அணி ஆரம்பத்தில் சிறப்பான துவக்கத்தை தந்தாலும் அந்த அணியின் ஸ்கோரை சிஎஸ்கே பௌலர்கள் 167 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

51 பந்துகளுக்கு 81 ரன்கள்

51 பந்துகளுக்கு 81 ரன்கள்

கேகேஆர் அணியின் ராகுல் திரிபாதி சிறப்பான துவக்கத்தை தந்துள்ளார். அவரின் 51 பந்துகளுக்கு 81 ரன்கள் கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்த சிறப்பாக கைகொடுத்தது. நேற்றைய போட்டியில் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் எடுத்த பல அதிரடி மாற்றங்கள் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

5வது இடத்தில் சிஎஸ்கே

5வது இடத்தில் சிஎஸ்கே

இந்நிலையில் இந்த வெற்றியின்மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் 2020 பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் ஆர்சிபியை காட்டிலும் ஒரு இடம் முன்னேறியுள்ளது கேகேஆர். இந்நிலையில் இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த சிஎஸ்கே தற்போது 5வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

3 ரன்கள் பின்தங்கிய பிளசிஸ்

3 ரன்கள் பின்தங்கிய பிளசிஸ்

அதிக ரன்களை அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள கே.எல். ராகுலை விட சிஎஸ்கேவின் டூ பிளசிஸ் 3 ரன்களே பின்தங்கியுள்ளார். அவர் நேற்றைய போட்டியில் 17 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் ஷேன் வாட்சன் இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

12 விக்கெட்டுகளுடன் முன்னிலை

12 விக்கெட்டுகளுடன் முன்னிலை

சிஎஸ்கேவின் சாம் குர்ரான் நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 7வது இடத்திற்கு நகர்ந்துள்ளார். இதில் காகிசோ ரபடா 12 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் முறையே 11 மற்றும் 10 விக்கெட்டுகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Story first published: Thursday, October 8, 2020, 10:42 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
Shane Watson moved to fifth in the run-scorers' list with his 40-ball 50
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+