Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிலாம் ஆடினா எங்கே இருந்து ஜெயிக்கிறது.. வீரர்கள் செய்த காரியம்.. வாய் விட்டு புலம்பிய வார்னர்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுடன் வெளியேறி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான இரண்டாம் தகுதிப் போட்டியில் ஹைதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டிக்கு பின் பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தோல்விக்கு காரணமான சில விஷயங்களை குறிப்பிட்டு புலம்பித் தள்ளினார்.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

டெல்லி கேபிடல்ஸ் அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் ஸ்டோய்னிஸ் 38 தவான் 78, ஹெட்மயர் 42 ரன்கள் குவித்தனர். அவர்களின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி நிலைகுலைந்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்தது.

கோட்டை விட்ட வீரர்கள்

கோட்டை விட்ட வீரர்கள்

டெல்லி வீரர்கள் ரன் குவித்தனர் என்பதை விட ஹைதராபாத் அணி வீரர்கள் ரன் குவிக்க விட்டனர் எனக் கூறுவதே சரி. அந்த அளவுக்கு கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். ஸ்டோய்னிஸ், தவான், ஹெட்மயர் என ரன் குவித்த மூன்று வீரர்களும் கொடுத்த பல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது ஹைதராபாத் அணி.

பீல்டிங் சொதப்பல்

பீல்டிங் சொதப்பல்

அது மட்டுமின்றி பீல்டிங்கிலும் அந்த அணியின் வீரர்கள் சொதப்பினர். பீல்டிங் சொதப்பலால் ரன்கள் வாரி இறைக்கப்பட்டது. அதுவே டெல்லி அணி அதிரடியாக ரன் குவிக்க முக்கிய காரணம். ஒருவேளை கேட்ச்களை சரியாக பிடித்திருந்தால் போட்டி ஹைதராபாத் அணிக்கு சாதகமாக மாறி இருக்கக் கூடும்.

சேஸிங் கடினம்

சேஸிங் கடினம்

190 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸிங் செய்த ஹைதராபாத் அணி வார்னர் விக்கெட்டை துவக்கத்திலேயே இழந்து தடுமாறியது. வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்தும், அப்துல் சமத் அதிரடி ஆட்டம் ஆடி 33 ரன்கள் சேர்த்தும் பயனில்லாமல் போனது. டெல்லி வெற்றி பெற்றது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய ஹைதராபாத் அணியின் கேப்ர்டன் டேவிட் வார்னர், இந்த ஐபிஎல் சீசனின் துவக்கத்தில் அனைவரும் மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகளைப் பற்றி மட்டுமே பேசினார்கள். எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக யாரும் கூறவில்லை. ஆனாலும், நாங்கள் இதுவரை வந்ததை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்.

வார்னர் புலம்பல்

வார்னர் புலம்பல்

இந்தப் போட்டியின் தோல்வி குறித்து பேசிய அவர் கேட்ச்களை கோட்டை விட்டாலோ, பீல்டிங்கில் ரன்களை விட்டுக் கொடுத்தாலோ தொடரை வெல்ல முடியாது என ஹைதராபாத் அணி வீரர்களின் செயல்பாட்டை குறித்து புலம்பினார். காலத்தில்களத்தில் தங்கள் அணி மோசமாக நடந்து கொண்டதாக கூறினார்.

காயம்

காயம்

மேலும், இந்த சீசனில் அணியின் முக்கிய வீரர்கள் புவனேஸ்வர் குமார், விரிதிமான் சாஹா ஆகியோர் காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், இருக்கின்ற அணியை வைத்து தான் தங்களால் செயல்பட முடிந்தது எனக் கூறினார்.

Story first published: Monday, November 9, 2020, 11:32 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+