Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் கப் ஜெயிச்சா.. கண்டிப்பா அதை செய்வேன்.. இது சத்தியம்.. ரசிகர்களை அதிர வைத்த வார்னர்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் டெல்லி அணியை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில், அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இறுதிப் போட்டியில் பங்கேற்று ஐபிஎல் கோப்பையும் வென்றால் தான் நிச்சயம் ஹைதராபாத் ரசிகர்கள் தன்னிடம் விரும்பும் ஒரு விஷயத்தை செய்வேன் என சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

ஹைதராபாத் அணி

ஹைதராபாத் அணி

2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி லீக் சுற்றில் படுமோசமான நிலையில் இருந்தது. பலரும் அந்த அணி பிளே-ஆஃப் செல்லும் என நினைக்கவில்லை. ஆனாலும், கடைசிப் மூன்று போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றது.

எலிமினேட்டர் வெற்றி

எலிமினேட்டர் வெற்றி

அடுத்து பிளே-ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. அந்த வெற்றியை அடுத்து இரண்டாம் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி. அதில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

டெல்லி அணி கடந்த சில போட்டிகளில் மோசமாக செயல்பட்டு தோல்வி அடைந்துள்ளது. மேலும், லீக் சுற்றில் இரண்டு முறையும் டெல்லி அணியை ஹைதராபாத் வீழ்த்தியது. அதனால், இந்தப் போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சத்தியம் செய்த வார்னர்

சத்தியம் செய்த வார்னர்

இந்த நிலையில், ஹைதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஐபிஎல் கோப்பை வென்றால் தான் ரசிகர்கள் விரும்பிய புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடுவேன் என சத்தியம் செய்தார். இது ஹைதராபாத் அணி ரசிகர்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டிக்டாக்

டிக்டாக்

லாக்டவுன் நேரத்தில் டேவிட் வார்னர் தன் குடும்பத்தினருடன் டிக்டாக் செயலியில் இந்திய பாடல்களுக்கு நடனம் ஆடி வந்தார். அப்போது அவர் பிரபல தெலுங்கு திரைப்பட பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு மனைவியுடன் நடனம் ஆடியது வைரல் ஆனது.

என்ன சொன்னார் வார்னர்?

என்ன சொன்னார் வார்னர்?

இந்த நிலையில் தான் வார்னர் தான் அதே பாடலுக்கு மீண்டும் நடனம் ஆடி குஷியில் ஆழ்த்துவேன் என சத்தியம் செய்துள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் அணியின் ரசிகர்கள் மற்றும் உரிமையாளர்கள் தன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Sunday, November 8, 2020, 18:10 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+