Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs SRH : இளம் வீரர் நீக்கம்.. காரணம் இதுதான்.. டெல்லி அணியில் பரபர மாற்றம்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

டாஸ்

டாஸ்

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த இரண்டு முறை ஹைதராபாத் அணிக்கு எதிராக சேஸிங் செய்து தோல்வி அடைந்து இருப்பதால் இந்த முடிவை எடுத்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

ப்ரித்வி ஷா நீக்கம்

ப்ரித்வி ஷா நீக்கம்

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் இளம் துவக்க வீரர் ப்ரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் தொடர்ந்து ரன் குவிக்காமல் சொதப்பி வரும் நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அணியில் ஹெட்மயர், பிரவீண் துபே சேர்க்கப்பட்டனர்.

மூன்று ஸ்பின்னர்கள்

மூன்று ஸ்பின்னர்கள்

டெல்லி அணி அஸ்வின், அக்சர் பட்டேல், பிரவீண் துபே என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது. ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் சுழற் பந்துவீச்சுக்கு தடுமாறி வரும் நிலையில் இந்த முடிவை எடுத்தது அந்த அணி.

ஹைதராபாத் அதே அணி

ஹைதராபாத் அதே அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்ற அதே அணியுடன் களமிறங்கியது. டேவிட் வார்னர் டாஸ் நிகழ்வின் போது உற்சாகமாக காணப்பட்டார். அவர் டாஸில் தோல்வி அடைந்ததை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

Story first published: Sunday, November 8, 2020, 19:45 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+