Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்முக்கு வந்த தவான்.. வெறியாட்டம் ஆடிய வெ.இண்டீஸ் வீரர் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பதற வைத்த டெல்லி

அபுதாபி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடியாக ஆடி ரன் குவித்தது.

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து அதிரடி ஆட்டம் ஆடியது.

தவான் 78 ரன்கள் குவித்தார். ஹெட்மயர் 22 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து வெறியாட்டம் ஆடினார்.

டாஸ் வென்ற டெல்லி

டாஸ் வென்ற டெல்லி

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. போட்டி நடந்த ஆடுகளத்தில் சேஸிங் செய்வதே சாதகமான முடிவாக பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது.

எதிர்பார்க்காத வீரர்

எதிர்பார்க்காத வீரர்

துவக்க வீரர் ப்ரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பதில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக களமிறங்கினார். `அவர் மிடில் ஆர்டரில் அதிரடி ஆட்டம் ஆடி வந்தவர். இந்தப் போட்டியில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடினார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

மார்கஸ் 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து மிரட்டினார். ஷிகர் தவான் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி 50 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டின் காரணமாக டெல்லி அணி மிக வேகமாக ரன் குவித்தது.

ஹெட்மயர்

ஹெட்மயர்

ஹெட்மயர் கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியில் மிரட்டினார். 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். 4 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்தார். தவான் 19வது ஓவரில் ஆட்டமிழந்ததை அடுத்து கடைசி 2 ஓவர்களில் அந்த அணி ரன் குவிக்கும் வாய்ப்பை தவறவிட்டது.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

எனினும், டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து மிரட்டியது. சன்ரைசர்ஸ் அணிக்கு இது பெரிய இலக்காக கருதப்பட்டது. மேலும், பந்துவீச்சில் ஹைதராபாத் அணி மோசமாக செயல்பட்டது.

மிரண்ட சன்ரைசர்ஸ்

மிரண்ட சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணியின் ஹோல்டர் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். நதீம் 48 ரன்கள் வாரி இறைத்தார். ரஷித் கான் மட்டுமே 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து ஆறுதல் அளித்தார். சந்தீப் சர்மா, ரஷித் கான், ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Story first published: Sunday, November 8, 2020, 22:33 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+