Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டமா காட்றீங்க.. பாண்டிங் அனுப்பிய வீரர்.. ஆடிப் போன வார்னர்.. எதிர்பார்க்காத திருப்பம்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடியாக சில மாற்றங்களை செய்தது.

அதில் துவக்க வீரராக அதிரடி ஆல் - ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்-ஐ அனுப்பி அதிர வைத்தார் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

டெல்லி அணி

டெல்லி அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட போதும் கடைசி லீக் போட்டிகள் மற்றும் பிளே-ஆஃப் தொடரின் முதல் தகுதிப் போட்டியில் தோல்விகளை சந்தித்தது. அணியில் பல்வேறு பலவீனங்கள் இருந்ததால் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் அதிரடி மாற்றம் செய்தார்.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சேஸிங் செய்யும் அணிகளே தற்போதைய சூழ்நிலையில் வெற்றி பெற்று வரும் நிலையில், டெல்லி அணி, ஹைதராபாத் அணியின் பலவீனங்களை மனதில் வைத்து பேட்டிங் தேர்வு செய்து மூன்று ஸ்பின்னர்களுடன் இறங்கியது.

ப்ரித்வி ஷா நீக்கம்

ப்ரித்வி ஷா நீக்கம்

மேலும், தொடர்ந்து சொதப்பி வந்த துவக்க வீரர் ப்ரித்வி ஷா அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் யார் துவக்கம் அளிப்பார்கள் என்பது டாஸ் போடப்படும் போது புரியாத புதிராக இருந்தது. ரஹானே துவக்கம் அளிக்கக் கூடும் என பலரும் எதிர்பார்த்தனர்.

மாற்று வீரர் இவரா?

மாற்று வீரர் இவரா?

ஆனால், அதிரடியாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கினார். அவர் முந்தைய போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ரன் குவித்து வந்தார். முக்கியமான போட்டியில் அவரை துவக்க வீரராக இறக்கி அதிர வைத்தார் பாண்டிங்.

ஸ்டோய்னிஸ்

ஸ்டோய்னிஸ்

ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். டெல்லி அணியின் ரன் ரேட் 4வது ஓவரில் 10 ரன்களை கடந்தது. ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். அவர் 5 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து மிரட்டினார்.

மிரண்டு போன வார்னர்

மிரண்டு போன வார்னர்

மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவானும் அதிரடி ஆட்டம் ஆடவே ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மிரண்டு போனார். ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்த வித்தியாசமான பீல்டிங் வியூகங்கள் அமைத்தார். எனினும், அவர் ரன் குவித்த பின்னரே ஆட்டமிழந்தார்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

டெல்லி அணி நல்ல துவக்கம் பெற்றதை அடுத்து 15 ஓவர்களில் 139 ரன்களை எட்டியது. தவான் அரைசதம் கடந்தும் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதை அடுத்து ஹைதராபாத் அணி தவித்தது. பாண்டிங் செய்த ஒரு மாற்றம் போட்டியை மாற்றியது.

Story first published: Sunday, November 8, 2020, 21:35 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+