Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பி அனுப்பிய பாண்டிங்.. போட்டியை மாற்றிய அதிரடி மன்னன்.. பிளே-ஆஃப்பில் நடந்த தரமான சம்பவம்!

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணியில் திடீரென பேட்டிங் ஆர்டரை மாற்றி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரான் ஹெட்மயரை பேட்டிங் செய்ய அனுப்பினார் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

அந்த முடிவால் போட்டி மாறியது. டெல்லி அணி பேட்டிங் இன்னிங்க்ஸில் அவர் அதிரடி ஆட்டம் ஆடினார்.

அவர் குவித்த ரன்களால் ஹைதராபாத் அணி கடைசி இரு ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய போதும் பெரிய இலக்கை துரத்த வேண்டிய நிலைக்கு ஆளானது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

பிளே-ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் - தவான் துவக்கம் அளித்தனர்.

தவான் அதிரடி

தவான் அதிரடி

தவான் அதிரடி துவக்கம் அளித்தார். அவருடன் சேர்ந்து மார்கஸ்-உம் பவுண்டரி அடிக்க, ஹைதராபாத் அணி ரன்குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மிடில் ஆர்டரில் சிக்கல்

மிடில் ஆர்டரில் சிக்கல்

2 விக்கெட்கள் வீழ்ந்த பின் ரன் ரேட் குறைந்தது. ஸ்டோய்னிஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். அவரை துவக்க வீரராக ஆட வைத்ததால், மிடில் ஆர்டரில் அதிரடி ஆட்டம் ஆட யாரை அனுப்பலாம் என்ற குழப்பம் ஏற்பட்டது.

உள்ளே வந்த ஹெட்மயர்

உள்ளே வந்த ஹெட்மயர்

இந்த சீசனில் இதுவரை பெரிய இன்னிங்க்ஸ் ஆடாத ஹெட்மயரை நம்பி அனுப்பினார் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். அது சரியான முடிவாக மாறியது. தவானுடன் சேர்ந்து தெறிக்கவிட்டார் ஹெட்மயர். 18வது ஓவரில் அவரது அதிரடியால் 18 ரன்கள் கிடைத்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

கடைசி இரு ஓவர்களில் சந்தீப் சர்மா, டி நடராஜன் சிறப்பாக பந்துவீசி பவுண்டரி அடிக்க விடவில்லை. அப்படி இருந்தும் ஹெட்மயர் 22 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 190 ஆக இருந்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்தது.

ஹைதராபாத் தடுமாற்றம்

ஹைதராபாத் தடுமாற்றம்

அடுத்து சேஸிங் செய்த ஹைதராபாத் அணி 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் திணறியது. 172 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஹெட்மயர் ஆட்டத்தால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. அது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

Story first published: Monday, November 9, 2020, 0:03 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+