For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டக் அவுட் ஆகுறதுக்குண்ணே இவரை டீம்ல எடுத்தீங்களா? இப்படியா பண்றது.. வழியில்லாமல் சிக்கிய வார்னர்!

அபுதாபி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிளே-ஆஃப் சுற்றில் அணியில் இடம் பெற்றார் விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி.

தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் அணிக்கு எந்த வகையிலும் அவர் உதவியாக இல்லை.

ஹைதராபாத் அண்ணி பிளே-ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் அவர் மீதும், அவரை தேர்வு செய்த கேப்டன் வார்னர் மீதும் விமர்சனம் எழுந்துள்ளது.

டக் அவுட்

டக் அவுட்

பிளே-ஆஃப் சுற்றில் அவர் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட் ஆனார். சாஹாவின் காயத்தால் அணியில் இடம் பெற்ற அவர் மோசமாக சொதப்பியதும் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணம்.

விரிதிமான் சாஹா

விரிதிமான் சாஹா

விரிதிமான் சாஹா லீக் சுற்றின் கடைசி இரு போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி ஹைதராபாத் அணியை பிளே-ஆஃப் அழைத்துச் சென்றார். ஆனால், அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு, போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.

ஜானி பேர்ஸ்டோ இல்லை

ஜானி பேர்ஸ்டோ இல்லை

இதை அடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். விக்கெட் கீப்பரான அவருக்கு பதில் ஜானி பேர்ஸ்டோ மீண்டும் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியின் வார்னர், வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் என நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருந்ததால் அவரை சேர்க்க முடியவில்லை.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி

அவருக்கு பதில் இந்திய உள்ளூர் வீரரான ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். பெங்களூர் போட்டியில் துவக்க வீரராக இறங்கிய அவர் மூன்று பந்துகளில் டக் அவுட் ஆனார். அடுத்து டெல்லி போட்டியில் அவரை ரஷித் கானுக்கும் பின் எட்டாவது வீரராக பேட்டிங் செய்ய அனுப்பினார் வார்னர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனாலும், அவர் இந்த முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இரண்டு வாய்ப்புகளிலும் டக் அவுட் ஆனதால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. பேட்டிங்கில் பயனில்லாத அவரை அணியில் தேர்வு செய்ததால் வார்னர் மீதும் விமர்சனம் எழுந்தது.

வார்னர்

வார்னர்

எனினும், வார்னர் வேறு வழியின்றி தான் அவரை அணியில் தேர்வு செய்தார். விஜய் ஷங்கர் காயத்தால் வெளியேறிய நிலையில் தான் மாற்று ஆல் - ரவுண்டராக ஜேசன் ஹோல்டர் அணியில் இடம் பெற்றார். அவருக்கு வழிவிட்டு, வெளிநாட்டு வீரரான பேர்ஸ்டோ அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 9, 2020, 12:54 [IST]
Other articles published on Nov 9, 2020
English summary
IPL 2020 Qualifier 2 DC vs SRH : Shreevats Goswami gone for duck in both attempts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+