For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேவைப்படும் போதெல்லாம் நெருப்பா விளையாடுவாரு... டெல்லி அணி வீரரை புகழ்ந்து தள்ளிய பாங்கர்

அபுதாபி : இன்றைய ஐபிஎல்லின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் தேவை ஏற்படும்போதெல்லாம் நெருப்பாக விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பௌலர் ரஷீத்கானை எதிர்கொள்ளும் விதம் குறித்து ஷிகர் தவானுக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல் தகுதிச்சுற்றில் தோல்வி

முதல் தகுதிச்சுற்றில் தோல்வி

டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் துவக்கம் முதலே சிறப்பான போட்டிகளை தந்த போதிலும் சமீபத்திய சில போட்டிகளில் சொதப்பியது. ஆயினும் பிளே-ஆப் சுற்றில் இரண்டாவது இடத்தில் நிலை கொண்டது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய டெல்லி அணி மிக மோசமாக தோல்வியுற்றது.

சன்ரைசர்ஸ் -டெல்லி அணிகள் மோதல்

சன்ரைசர்ஸ் -டெல்லி அணிகள் மோதல்

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது டெல்லி அணி. இதனிடையே, ஐபிஎல்லின் ஆரம்ப லீக் போட்டிகளில் சொதப்பினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு, எலிமினேட்டர் சுற்றிலும் சிறப்பாக விளையாடி தற்போது 2வது தகுதிச்சுற்று போட்டியில் விளையாடவுள்ளது சன்ரைசர்ஸ் அணி.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இன்றைய ஐபிஎல்லின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அவர் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ள நிலையில், அந்த அணி குறித்த புரிதல் அவருக்கு ஏற்கனவே இருக்கும்.

முன்னாள் பேட்டிங் கோச் உறுதி

முன்னாள் பேட்டிங் கோச் உறுதி

இந்நிலையில் தேவை ஏற்படும் போதெல்லாம் ஷிகர் தவான் நெருப்பாக விளையாடுவார் என்று முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கேம் பிளான் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்தர பௌலர் ரஷீத் கானை சமாளிக்கும் விதம் குறித்து தவானுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பங்களிப்பை அளிப்பார்

சிறப்பான பங்களிப்பை அளிப்பார்

உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ள ஷிகர் தவான் இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு தேவையான ஆட்டத்தை அளிப்பார் என்றும் பாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, November 8, 2020, 18:05 [IST]
Other articles published on Nov 8, 2020
English summary
I believe, Shikhar Dhawan is going to be a brilliant brilliant player -Bangar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+