Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமேல் கிரிக்கெட் ஆடவே முடியாது.. மனம் உடைந்த இளம் வீரர்.. டிராவிட் செய்த மறக்க முடியாத உதவி!

துபாய் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர் கம்லேஷ் நாகர்கோட்டி மிக சிறப்பாக ஆடி வருகிறார்.

ஆனால், அவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இனி தன்னால் கிரிக்கெட் ஆடவே முடியாதா? என உடைந்து போன நிலையில் இருந்தார்.

அவருக்கு உதவி செய்து அவரை மீண்டும் கிரிக்கெட் களத்தை காண வைத்ததில் ராகுல் டிராவிட்டுக்கு பெரும் பங்கு உள்ளது.

எதிர்கால வீரர்

எதிர்கால வீரர்

வேகப் பந்துவீச்சாளரான கம்லேஷ் நாகர்கோட்டி 2018 அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார். அப்போதே அவர் இந்திய கிரிக்கெட்டில் கவனம் பெற்றார். கங்குலி அவரைப் பற்றி பேசி இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர் என பாராட்டி இருந்தார்.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

2018 ஐபிஎல் ஏலத்தில் கம்லேஷ் நாகர்கோட்டிக்கு பெரும் போட்டி இருந்தது. உள்ளூர் போட்டிகளில் கூட அதிகம் ஆடி இராத அந்த இளம் வீரரை வாங்க ஐபிஎல் அணிகள் போட்டி போட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 3.8 கோடிக்கு வாங்கியது.

காயம்

காயம்

ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரால் அந்த அணியில் ஒரு போட்டியில் கூட ஆட முடியவில்லை. காயம் காரணமாக தவித்து வந்தார் அவர். முதுகில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். அவரால் பந்து வீச முடியவில்லை.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட் அவருக்கு உதவினார். காயம் ஏற்பட்ட வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி தான் உதவி வருகிறது. அப்போது டிராவிட் அவருக்கு பல அறிவுரைகள் கூறி உதவி உள்ளார்.

இங்கிலாந்து செல்ல உதவி

இங்கிலாந்து செல்ல உதவி

மேலும், அவரது சிகிச்சைக்கு இங்கிலாந்து செல்ல பிசிசிஐயிடம் பேசி ஏற்பாடு செய்து தந்தார். அதன் பின் அவரது உடல்நிலை முன்னேறியது. காயத்தில் இருந்து குணமடைந்தார். மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்கேற்க முயன்ற போது டிராவிட் அவருக்கு மீண்டும் உதவினார்.

நம்பிக்கை வார்த்தைகள்

நம்பிக்கை வார்த்தைகள்

காயத்தில் சிக்கி இருந்த போது நம்பிக்கை வார்த்தைகள் கூறிய டிராவிட், மீண்டும் கிரிக்கெட் ஆடும் உத்வேகத்தையும் அளித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது 2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார் அவர்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முக்கிய வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் கம்லேஷ் நாகர்கோட்டி சிறப்பாக பந்து வீசி 2 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கி வீழ்த்தினார்.

Story first published: Friday, October 2, 2020, 20:52 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+