Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் ஐபிஎல் போட்டி அட்டவணை.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல் இங்கே!

துபாய் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் தன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

செப்டம்பர் 22இல் ராஜஸ்தான் அணி ஷார்ஜாவில் தன் முதல் போட்டியில் ஆட உள்ளது.

அந்தப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களம் காண உள்ளது. கடந்த சீசனில் அந்த அணியில் பாதி தொடரில் கேப்டன்சி மாற்றம் நடந்தது. அஜின்க்யா ரஹானே கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

பிளே ஆஃப் வாய்ப்பு

பிளே ஆஃப் வாய்ப்பு

அந்த அணி இந்த ஆண்டு குறைந்தது பிளே-ஆஃப் வரை செல்ல முயற்சி செய்யும். கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததே அந்த அணியின் பெரிய கவலையாக இருந்தது. இந்த சீசனில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வரும் பென் ஸ்டோக்ஸ் கை கொடுத்தால் ராஜஸ்தான் கோப்பை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.

சமநிலை கொண்ட அணி

சமநிலை கொண்ட அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள், இளம் வீரர்கள் என சமநிலை கொண்ட அணி உள்ளது. அதே சமயம் அந்த அணி வெளிநாட்டு வீரர்களை அதிகம் சார்ந்து இருப்பது அதன் பலவீனமாக உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்க உள்ள அனைத்து லீக் சுற்றுப் போட்டிகள், அவை நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை இங்கே காணலாம்.

  • செப்டம்பர் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 27: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 22: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 06: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 09: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 11: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், மாலை 3:30 மணி
  • அக்டோபர் 14: டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 17: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், மாலை 3:30 மணி
  • அக்டோபர் 19: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 25: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 30: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி
  • நவம்பர் 01: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
Story first published: Sunday, September 6, 2020, 22:45 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+