Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சந்தோஷமா இருக்கு... சூப்பர் வெற்றி.. விசில் போடும் ரவீந்திர ஜடேஜா

அபுதாபி : மீண்டும் அணியில் இணைந்து விளையாடுவது மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் நேற்று துவங்கிய நிலையில் முதல் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி கொண்டுள்ளது.

IPL 2020 :Ravindra Jadeja Hails Chennai Super Kings Win

இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே வெற்றி குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள ஜடேஜா சூப்பர் வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நேற்று விளையாடிய சிஎஸ்கே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 5 பந்துகளில் 10 ரன்களை அடித்த நிலையில் 4 ஓவர்களில் எதிரணியின் 2 முக்கிய விக்கெட்டுகளையும் விழ்த்தினார்.

IPL 2020 :Ravindra Jadeja Hails Chennai Super Kings Win

சிஎஸ்கேவின் வெற்றியை அடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, தனக்கு பிடித்தமான கிரிக்கெட்டை நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுவது உற்சாகமாக உள்ளதாகவும் சூப்பர் வெற்றி என்றும் இது தொடரும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, September 20, 2020, 18:55 [IST]
Other articles published on Sep 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+