
ஆர்சிபி தோல்வி
நேற்றைய ஐபிஎல்லின் 55வது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றிற்கு இரண்டாவது அணியாக முன்னேறியுள்ளது. தோல்வியுற்ற போதிலும் 3வது அணியாக ஆர்சிபியும் பிளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.

சுதாரித்த டெல்லி அணி
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வி மூலம் தொடர்ந்து 4வது போட்டியில் ஆர்சிபி தோல்வியுற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த போதிலும் நேற்றைய போட்டியில் சுதாரித்துக் கொண்டு வெற்றிக் கணக்கை மீண்டும் துவக்கி வைத்துள்ளது.

தேவையான வெற்றிகளை பெற்றுள்ளோம்
இந்நிலையில் போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பிளே-ஆப் சுற்றிற்கு தேவையான வெற்றிகளை தாங்கள் பெற்றுள்ளதாகவும் அதனால்தான் அந்த சுற்றுக்கு தகுதி பெற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாய்ப்பை தங்களது அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

தோல்வி கொடுத்துள்ள படிப்பினை
பிளே-ஆப் சுற்றிற்கு ஆர்சிபி தகுதி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விராட் கோலி, தங்களது அணி வீரர்கள் மிகவும் உற்சாகத்துடன் உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த தோல்வி சில படிப்பினைகளை கற்று தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தையே ஆர்சிபியும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications