Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கதையை முடிக்க திட்டம் போட்ட கோலி.. டாஸ் வென்ற உடன் எடுத்த முடிவு.. காரணம் இதுதான்!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெறவே திட்டம் போட்டு கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் என கூறப்படுகிறது.

பெங்களூர் - சென்னை போட்டி

பெங்களூர் - சென்னை போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 44வது லீக் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

நெட் ரன் ரேட்

நெட் ரன் ரேட்

முதலில் பேட்டிங் தேர்வு செய்ய முக்கிய காரணம் அதிக நெட் ரன் ரேட் பெறுவது தான் என கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி பலவீனமாக இருக்கும் நிலையில் பெங்களூர் அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிக நெட் ரன் ரேட் பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற இப்படி திட்டமிட்டது.

சிஎஸ்கே அணியில் மாற்றம்

சிஎஸ்கே அணியில் மாற்றம்

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. மிட்செல் சான்ட்னர், மோனு குமார் அணியில் இடம் பெற்றனர். ஜோஷ் ஹேசல்வுட், ஷர்துல் தாக்குர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். வாய்ப்பில்லாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சிஎஸ்கே இந்த ,மாற்றத்தை செய்துள்ளது.

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணி மாற்றம்

பெங்களூர் அணியில் இசுரு உடானா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மொயீன் அலி அணியில் இடம் பெற்றார். அதிரடியாக பேட்டிங் ஆடி வெற்றி பெறும் நோக்கில் விராட் கோலி கூடுதல் பேட்ஸ்மேன் ஒருவரை பெற ஆல் - ரவுண்டர் மொயீன் அலியை அணியில் சேர்த்தார்.

Story first published: Sunday, October 25, 2020, 15:45 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+