Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஸ்பார்க் போதுமா? அவமானப்பட்டு கூனிக் கூறுகி.. எல்லாத்துக்கும் சேர்த்து வெளுத்த சிஎஸ்கே வீரர்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தன் மீதான விமர்சனத்துக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என தோனி கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதற்கு அடுத்த போட்டியில் ருதுராஜ் டக் அவுட் ஆனதால் மேலும் விவாதம் எழுந்தது.

ருதுராஜை விளாசி ரசிகர்கள் கருத்துக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், பெங்களூர் போட்டியில் அனைத்து விவாதங்களுக்கும் பதிலடி கொடுத்தார் அவர்.

பெங்களூர் - சென்னை போட்டி

பெங்களூர் - சென்னை போட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே ஆன லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி எளிதாக வெல்லும் என்றே பலரும் எண்ணினர். அந்த அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

மந்தமான ஆடுகளம் என்பதால் பெங்களூர் வீரர்கள் தடுமாறினர். விராட் கோலி 50, டிவில்லியர்ஸ் 39 ரன்கள் எடுத்து அணியை கரை சேர்க்க போராடினர், பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.

சிஎஸ்கே ஆட்டம்

சிஎஸ்கே ஆட்டம்

அடுத்து சிஎஸ்கே அணி சேஸிங் செய்யத் துவங்கியது. பாப் டுபிளெசிஸ் அதிரடியாக 13 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் கெயிக்வாட் துவக்க வீரராக இறங்கி முதலில் நிதான ஆட்டம் ஆடினார். பின் அதிரடிக்கு மாறினார்.

ருதுராஜ் அரைசதம்

ருதுராஜ் அரைசதம்

ருதுராஜ் கெயிக்வாட் அசத்தலாக ஆடி அரைசதம் அடித்தார். அப்போதே தன்னிடம் ஸ்பார்க் இருக்கிறது என நிரூபித்தார். அத்துடன் அவர் விடவில்லை. அணியின் வெற்றி கிடைக்கும் வரை, கடைசி வரை களத்தில் இருந்தார். 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.

பதிலடி

பதிலடி

2 விக்கெட்கள் வீழ்ந்த உடன் தோனி களத்துக்கு வந்தார். அவர் தான் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்ற கருத்தை முதலில் கூறி இருந்தார். அவர் முன்னிலையில் ருதுராஜ் கெயிக்வாட் போட்டியை பினிஷிங் செய்து காட்டினார்.

அந்த சிக்ஸ்

அந்த சிக்ஸ்

கடைசி நேரத்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அவர் அதிரடியாக சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்தார். சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாத வீரரான ருதுராஜ், பெங்களூர் அணியை தனி ஆளாக வீழ்த்தினார்.

சிஎஸ்கே பிளே-ஆஃப் வாய்ப்பு

சிஎஸ்கே பிளே-ஆஃப் வாய்ப்பு

சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் அதன் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு இன்னும் முடியவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் பெரிய வெற்றிகளை பெற்று, மற்ற அணிகளின் வெற்றி - தோல்விகளை வைத்து சிஎஸ்கே பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, October 25, 2020, 21:47 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+