அதே தப்பு.. கோலி - டிவில்லியர்ஸ் ஆடிய போது.. தோனி ஏன் இப்படி? சாம் பாவம்!
துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டது.
ஆனால், பெங்களூர் அணியை இன்னும் கூட சுருட்ட சில வாய்ப்புகள் இருந்தன.
தோனி இளம் வீரர் சாம் கர்ரனை நம்பாமல், அவருக்கு ஓவர் கொடுக்காமல் தவிர்த்தார்.

பெங்களூர் பேட்டிங்
இந்தப் பொட்டில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணியை எளிதாக வீழ்த்தலாம் என பெங்களூர் அணி திட்டமிட்டது. ஆனால், பேட்டிங்கில் அந்த அணி தடுமாறியது. 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர் அணி.

சாம் கர்ரன் விக்கெட்
சாம் கர்ரன் முதல் 4 ஓவர்களில் தன் 2 ஓவர்களை வீசினார். தன் இரண்டாவது ஓவரில் ஆரோன் பின்ச் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் அவருக்கு ஓவர் அளிக்கப்படவில்லை. பெங்களூர் அணி படிக்கல் விக்கெட்டை இழந்து ஆடி வந்தது.

கோலி - டிவில்லியர்ஸ் ஜோடி
விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் ஆடி வந்தனர் அவர்கள் விக்கெட்டை வீழ்த்தினால் பெங்களூர் அணி சுருண்டு விட அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், தோனி அதற்கான ஒரு முயற்சியை மட்டும் செய்யவில்லை. ரசிகர்கள் கூட அதை பற்றி கூறி வந்தனர்.

சாம் எங்கே?
சாம் கர்ரன் வந்தால் நிச்சயம் டிவில்லியர்ஸ் - கோலி தடுமாறுவார்கள், அவர்கள் விக்கெட் விழ வாய்ப்பு உள்ளது என விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால், தோனி அவருக்கு 19வது ஓவரில் தான் வாய்ப்பு அளித்தார்.

3 விக்கெட் அள்ளினார்
ஏற்கனவே ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்த சாம் கர்ரன் 19வது ஓவரில் மொயீன் அலி, விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினார். 3 ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார் சாம் கர்ரன்.

தோனி தவறு
தோனி அவருக்கு மத்திய ஓவர்களில் வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் அவர் விக்கெட் வீழ்த்தி இருக்கக் கூடும். அப்படி நடந்திருந்தால் பெங்களூர் அணியை இன்னும் கூட குறைவான ஸ்கோரை எடுக்கச் செய்திருக்க முடியும்.


Click it and Unblock the Notifications