Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது சிக்ஸ் தான்.. ஆனால் விக்கெட்டாக மாற்றிய இளம் வீரர்.. நம்ப மறுத்த டெல்லி கேப்டன்.. என்ன நடந்தது?

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் தேவ்தத் படிக்கல் பிடித்த கேட்ச் பாராட்டை அள்ளி வருகிறது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன் அசாத்தியமான கேட்ச் மூலம் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார் அவர்.

சிக்ஸ் அடித்த பந்து எப்படி அவுட் ஆனது? என அந்த கேட்ச்சை நம்ப மறுத்து ரீப்ளேவை பார்த்தபடியே வெளியேறினார் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.

பெங்களூர் - டெல்லி போட்டி

பெங்களூர் - டெல்லி போட்டி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன லீக் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ப்ரித்வி ஷா - தவான் மீண்டும் அபார துவக்கம் அளித்தனர். ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டம் ஆடி 42 ரன்கள் சேர்த்தார்.

மொயீன் அலி ஓவர்

மொயீன் அலி ஓவர்

மூன்றாவது வரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அவர் கடந்த போட்டிகளில் அதிரடியாக ரன் குவித்து இருந்ததால் அவரது விக்கெட்டை கைப்பற்ற பெங்களூர் அணி தீவிர முயற்சியில் இறங்கியது. அப்போது மொயீன் அலிக்கு ஓவர் கொடுத்தார் கோலி.

அது சிக்ஸ் தான்

அது சிக்ஸ் தான்

மொயீன் அலி வீசிய 12வது ஓவரின் மூன்றாவது பந்தை தூக்கி அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அது சிக்ஸ் தான் என நினைத்த நிலையில், பவுண்டரி எல்லை அருகே நின்று இருந்த தேவ்தத் படிக்கல் பந்தை எட்டி, வளைந்து பிடித்தார்.

எப்படி கேட்ச் பிடித்தார்?

எப்படி கேட்ச் பிடித்தார்?

தான் தடுமாறி பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விடுவோம் என்ற நிலையில் பந்தை மேலே எறிந்து, பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்றார். பின் மீண்டும் உள்ளே வந்த அவர் பந்தை கேட்ச் பிடித்தார். அந்த நம்ப முடியாத கேட்ச்சால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.

அவுட் தானா?

அவுட் தானா?

அந்த கேட்ச் அவுட் தானா? என நம்ப முடியாமல் ரீப்ளேவை பார்த்த படியே வெளியேறினார் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவர் ஆட்டமிழந்தாலும் டெல்லி அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது.

Story first published: Monday, October 5, 2020, 22:48 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+