Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவில்லியர்ஸ் ஏமாற்றம்.. போராடி வீழ்ந்த கோலி.. 4 விக்கெட் அள்ளிய பவுலர்.. டெல்லி அபார வெற்றி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் குவித்தது.

டெல்லி அணியை பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி சமாளிக்க முடியாமல் திணறினார். ப்ரித்வி ஷா 42, ஸ்டோய்னிஸ் 26 பந்தில் 53 ரன்கள் குவித்தனர். அடுத்து சேஸிங் செய்த பெங்களூர் அணி விக்கெட்களை இழந்து தோல்வி அடைந்தது.

பெங்களூர் - டெல்லி போட்டி

பெங்களூர் - டெல்லி போட்டி

2020 ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

மாற்றம்

மாற்றம்

இந்தப் போட்டியில் பெங்களூர் அணியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் மொயீன் அலி அணியில் இடம் பெற்றார். குர்கீரத் சிங் மான்-க்கு பதில் முகமது சிராஜ் இடம் பெற்றார். டெல்லி அணியில் அமித் மிஸ்ராவுக்கு பதில் அக்சர் பட்டேல் இடம் பெற்றார்.

டெல்லி ரன் குவிப்பு

டெல்லி ரன் குவிப்பு

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா அதிரடி துவக்கம் அளித்தார் தவான் நிதானமாக 32 ரன்கள் சேர்த்தார். ப்ரித்வி ஷா 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார்.

ஸ்டோய்னிஸ் அதிரடி

ஸ்டோய்னிஸ் அதிரடி

அடுத்து பண்ட் அதிரடி ஆட்டம் ஆடி 37 ரன்கள் சேர்த்தார். ஸ்டோய்னிஸ் கடைசி வரை களத்தில் நின்று 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

பெங்களூர் சொதப்பல் பந்துவீச்சு

பெங்களூர் சொதப்பல் பந்துவீச்சு

பெங்களூர் அணி துவக்கம் முதலே ரன்களை கொடுத்து வந்தது. வாஷிங்க்டன் சுந்தர் மட்டுமே கட்டுக் கோப்பாக பந்து வீசினார். சைனி 3 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்தார். சிராஜ் 2, மொயீன் அலி 1, இசுரு உடானா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பெங்களூர் அணி சேஸிங்

பெங்களூர் அணி சேஸிங்

197 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய பெங்களூர் அணி துவக்க வீரர்கள் தேவ்தத் மற்றும் ஆரோன் பின்ச்சை 4 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இழந்தது. அடுத்து டிவில்லியர்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி மட்டுமே போராடி 43 ரன்கள் சேர்த்தார்.

தோல்வி

தோல்வி

மற்ற பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலாக ஆடி விக்கெட்டை பறி கொடுத்த வண்ணம் இருந்தனர். 20 ஓவர்களில் பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது.

ரபாடா 4 விக்கெட்

ரபாடா 4 விக்கெட்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றியில் வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா பெரும் பங்கு வகித்தார். அவர் 4 விக்கெட்களை சாய்த்தார். அன்ரிச் நோர்ஜே 2, அக்சர் பட்டேல் 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Monday, October 5, 2020, 23:52 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+