
டாஸ் வென்ற கோலி
2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முதல் பாதியின் கடைசி போட்டியில் பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதின. இத்துடன் அனைத்து அணிகளும் மற்ற ஏழு அணிகளுடன் ஒரு முறை மோதி உள்ளன. இந்த 28வது லீக் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சிறிய மைதானம்
இந்தப் போட்டி நடக்கும் ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் இங்கே முதலில் ஆடும் அணி 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஆடும் அணியும் 200 ரன்களை எட்டலாம், ஆனாலும், சேஸிங்கின் போது கடும் அழுத்தம் இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் ஆடுவதே பாதுகாப்பானது. அதன் காரணமாகவே கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

நரைன் நீக்கம்
கொல்கத்தா அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் சுனில் நரைன் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் டாம் பான்டன் அணியில் சேர்க்கப்பட்டார். சுனில் நரைன் பந்துவீச்சு விதிகளுக்கு மாறாக இருந்ததாக முதல் புகார் எழுந்த நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார். இன்ரிஔ இன்னொரு முறை அவர் மீது புகார் அளிக்கப்பட்டால் அவர் இந்த சீசன் முழுவதும் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரே ரஸ்ஸல்
கடந்த போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் காயத்தால் பந்து வீசவில்லை. அவர் இந்தப் போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த நிலையில், அவர் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ளார். போட்டி ஷார்ஜாவில் நடப்பதால் அவர் சிக்ஸ் மழை பொழிய வாய்ப்பு உள்ளது.

சிராஜ் வாய்ப்பு பெற்றார்
பெங்களூர் அணியில் குர்கீரத் மான் சிங் நீக்கப்பட்டு அவருக்கு பதில் முகமது சிராஜ் அணியில் இடம் பெற்றார். இரு அணிகளும் தங்களின் கடைசிப் போட்டியில் வெற்றி பெற்று இருந்ததால் இந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

பெங்களூர் அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி - தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், வாஷிங்க்டன் சுந்தர், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், சாஹல்

கொல்கத்தா அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் - ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், டாம் பான்டன், நிதிஷ் ராணா, இயான் மார்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி


Click it and Unblock the Notifications