Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இது? தோனி மாதிரி ஆடிப் பார்க்கிறாரா? கோலி செய்த காரியம்.. கலக்கத்தில் ரசிகர்கள்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் பல எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்து வருகிறது.

Recommended Video

KKR அணியை வீழ்த்த விராட் கோலி எடுத்த முடிவு

விராட் கோலி துவக்கத்தில் மோசமாக ஆடி வந்தார். இடையே இரண்டு போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடினார்.

தற்போது மீண்டும் பந்துகளை வீணடித்து ஆமை வேகத்தில் ஆடி அதிர வைத்துள்ளார். விராட் கோலி, கடந்த சில ஆண்டுகளாக தோனி பேட்டிங்கில் தடுமாறி வருவது போலவே உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி 2020 ஐபிஎல் தொடருக்கு முன் கடைசியாக இந்தியா ஆடிய நியூசிலாந்து தொடரிலும் சரியாக ரன் குவிக்கவில்லை. அடுத்து 2020 ஐபிஎல் தொடரின் துவக்கத்திலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

விமர்சனம்

விமர்சனம்

விராட் கோலி பார்ம் அவுட் ஆகி விட்டதாக விமர்சனம் எழுந்தது. லாக்டவுன் சமயத்தில் அவர் சரியான பயிற்சி செய்யாமல் இருந்ததால் பார்ம் அவுட் ஆகி இருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. விராட் கோலி அதன் பின் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

இரண்டு போட்டிகள் அதிரடி

இரண்டு போட்டிகள் அதிரடி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடி 72 மற்றும் 90 ரன்கள் சேர்த்து தனி ஆளாக பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்து இருந்தார். இடையே டெல்லி போட்டியில் நிதான ஆட்டம் ஆடி 43 ரன்கள் எடுத்தது, இந்த அதிரடி ஆட்டங்களால் மறைந்து போனது.

கொல்கத்தா போட்டி

கொல்கத்தா போட்டி

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் ஆடினார் விராட் கோலி. இந்த மைதானத்தில் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம் என்பதால் கோலி அதிரடி ஆட்டம் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

டிவில்லியர்ஸ் அதிரடி

டிவில்லியர்ஸ் அதிரடி

கோலி தடுமாறிய போதும், ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டினார். 33 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அவர் 5 ஃபோர், 6 சிக்ஸ் அடித்தார். ஆனால், கோலி வெறும் ஒரு ஃபோர் மட்டுமே அடித்தார். 28 பந்துகளில் 33 ரன்களக் எடுத்த கோலி, 29 ரன்களை சிங்கிளாக ஓடியே எடுத்திருந்தார்.

தோனி போல ஆடுகிறாரா?

தோனி போல ஆடுகிறாரா?

கோலி எப்போதும் இப்படி ஆடமாட்டார். கிட்டத்தட்ட தோனியின் பேட்டிங் ஸ்டைலில் கோலி ஆடி வருகிறார். தோனி கடந்த சில ஆண்டுகளாக இப்படித் தான் ஆடி வருகிறார். அவரால் முன்பு போல போட்டிகளை பினிஷ் செய்ய முடியவில்லை.

ரசிகர்கள் கலக்கம்

ரசிகர்கள் கலக்கம்

விராட் கோலியும் அது போல மாறி வருகிறாரா? என்ற கேள்வியுடன் கலக்கத்தில் உள்ளனர் கோலி ரசிகர்கள். ஒருவேளை ஷார்ஜா மைதானம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்திருக்கலாம் என்றும் சில விமர்சகர்கள் கூறி உள்ளனர். ஆனாலும், டி வில்லியர்ஸ் எப்படி அதிரடி ஆட்டம் ஆடினார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, October 13, 2020, 10:24 [IST]
Other articles published on Oct 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+