Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் கோலி, ஏபிடி.. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஷமி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!

ஷார்ஜா : பெங்களூர் அணியின் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி முகமது ஷமி உற்சாகம் அடைந்தார்.

ஆனால், அவரது அடுத்த ஓவரில் கிறிஸ் மோரிஸ் சரியான பதிலடி கொடுத்து திகைக்க வைத்தார்.

அந்த ஒரே ஓவரால் ஷமி இந்த போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளராக மாறினார்.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஏபி டிவில்லியர்ஸ்ஐ ஆறாவது வரிசையில் பேட்டிங் ஆட வைத்தார் கோலி. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்த நிலையில், கோலி மட்டும் நிலையாக ஆடி 48 ரன்கள் சேர்த்தார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்

ஒரே ஓவரில் 2 விக்கெட்

இந்த நிலையில், 18வது ஓவரை வீசினார் முகமது ஷமி. அந்த ஓவரில் விராட் கோலி 48 ரன்கள் எடுத்த நிலையிலும், ஏபி டிவில்லியர்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். பெங்களூர் அணி அந்த ஓவரின் முடிவில் 137 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தவித்தது.

ஷமி குஷி

ஷமி குஷி

ஒரே ஓவரில் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து உற்சாகம் அடைந்தார் முகமது ஷமி. 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் ஷமி. அந்த ஓவர் திருப்புமுனையாக கருதப்பட்டது.

கிறிஸ் மோரிஸ் அதிரடி

கிறிஸ் மோரிஸ் அதிரடி

அடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரை சந்தித்தார். அந்த ஓவரை ஷமி வீசினார். மோரிஸ் அந்த ஓவரில் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து தெறிக்கவிட்டார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 24 ரன்கள் சேர்த்தது பெங்களூர் அணி.

ஷமி கொடுத்த ரன்கள்

ஷமி கொடுத்த ரன்கள்

ஷமி 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். 2 முக்கிய விக்கெட்களை எடுத்தாலும் பஞ்சாப் அணியில் அதிக ரன்கள் வாரி இறைத்த பந்துவீச்சாளராக மாறினார். அந்த ஒரே ஓவரில் அவரது நிலை தலைகீழாக மாறியது.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

பெங்களூர் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது. ஷார்ஜா மைதானத்தில் இந்த ஸ்கோர் அந்த அணிக்கு போதவில்லை. ஷமி ஓவரில் 24 ரன்கள் எடுத்தும் பெங்களூர் அணியால் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. பஞ்சாப் அணி எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

Story first published: Thursday, October 15, 2020, 23:14 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+