Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிரடி மன்னனை இறக்கிய பஞ்சாப்.. செம குஷியான ரசிகர்கள்.. சிக்ஸ் மழை.. கோலி எடுத்த முடிவு!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிண்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.,

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றமாக கிறிஸ் கெயில் அணியில் சேர்க்கப்பட்டார்.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பஞ்சாப் அணியை சந்தித்தது பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். அவர் பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் அணி முதலில் பந்து வீசியது.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

இந்தப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற நிலையில், எளிதாக சிக்ஸ் அடிக்கலாம் என்பதால் பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலை களமிறக்கியது. அவர் இந்த சீசனில் ஆடும் முதல் போட்டி இது தான். அதனால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பஞ்சாப் மாற்றம்

பஞ்சாப் மாற்றம்

பஞ்சாப் அணியில் நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வால், ராகுல் என சிக்ஸ் அடிக்க ஏற்கனவே பல வீரர்கள் இருக்கும் நிலையில், கெயிலும் இணைந்துள்ளார். முருகன் அஸ்வின், தீபக் ஹூடா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

சிக்ஸ் மழை

சிக்ஸ் மழை

பெங்களூர் அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்கியது. அந்த அணியில் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, துவக்க வீரர் ஆரோன் பின்ச் ஆகியோர் அதிரடியாக ஆடி சிக்ஸ் அடிப்பார்கள் என்பதால் இந்தப் போட்டியில் சிக்ஸ் மழை உறுதி.

Story first published: Thursday, October 15, 2020, 19:57 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+