Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி பந்து வரை திக்திக்.. பதற வைத்த பஞ்சாப்.. கோலி செய்த சொதப்பல்.. மண்ணைக் கவ்விய பெங்களூர்!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் 31 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி போட்ட திட்டங்கள் மோசமாக தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணியும் எளிதாக முடிக்க வேண்டிய சேஸிங்கை கடைசி பந்து வரை கொண்டு சென்று மிரள வைத்தது.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

இந்தப் போட்டியில் பெங்களூர் அன்பி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல் துவக்கம் அளித்தனர். பின்ச் 20, படிக்கல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கோலி திட்டம் தோல்வி

கோலி திட்டம் தோல்வி

விராட் கோலி நிதான ஆட்டம் ஆடினார். சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக ஏபி டிவில்லியர்ஸை இறக்காமல், சிவம் துபேவை இறக்கினார். அதனால் ரன் குவிப்பு தடைபட்டது. கோலி 48, துபே 23, டிவில்லியர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கிறிஸ் மோரிஸ் அதிரடி

கிறிஸ் மோரிஸ் அதிரடி

கடைசி நேரத்தில் கிறிஸ் மோரிஸ் அதிரடி ஆட்டம் ஆடி கை கொடுத்தார். கடைசி ஓவரில் ஷமி பந்துவீச்சை பிளந்து கட்டினார் மோரிஸ். அந்த ஓவரில் 24 ரன்கள் சேர்த்து, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் ஆட்டம்

பஞ்சாப் ஆட்டம்

அடுத்து ஆடிய பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் அதிரடி ஆட்டம் ஆடி சிறப்பான துவக்கம் அளித்தார். அவர் 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அடுத்து ராகுல் - கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தனர். கெயில் இந்த சீசனில் தன் முதல் போட்டியில் ஆடியதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

கெயில் - ராகுல் ஜோடி

கெயில் - ராகுல் ஜோடி

கெயில் நிறைய டாட் பால் ஆடினார். சில பந்துகளில் சிக்ஸ் அடித்தார். ராகுலும் அதே போலவே ஆடியதால் பஞ்சாப் அணி திடீரென நிதானம் காட்டி, திடீரென அதிரடியாக ரன் குவித்து இலக்கை நெருங்கி வந்தது. இருவரும் விக்கெட் விழாமல் ஆடினர்.

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கிறிஸ் கெயில் கடைசி ஓவரை எதிர்கொண்டார். சாஹல் வீசிய அந்த ஓவரில் அவரால் முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐந்தாவது பந்தில் ராகுல் ஒரு ரன் ஓட முயல, கெயில் ரன் அவுட் ஆனார்.

பஞ்சாப் வெற்றி

பஞ்சாப் வெற்றி

கெயில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிக்ஸ் அடித்து பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். பெங்களூர் அணி அதிக ரன்கள் குவிக்காததால் இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது.

Story first published: Thursday, October 15, 2020, 23:40 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+