Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதயத்தை நோக்கி பந்தை எறிந்த சைனி.. சுருண்டு விழுந்த வீரர்.. அதன் பின் நடந்த தரமான சம்பவம்!

அபுதாபி : ராகுல் திவாதியா அதிரடியாக சிக்ஸர்கள் அடித்து இந்த சீசனில் பெரும் புகழ் பெற்றுள்ளார்.

அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளே சந்தித்தாலும் மீண்டும் ஒரு அதிரடி இன்னிங்க்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அவர் ஆடிய போது கடைசி ஓவரில் அவரது இதயத்தில் பந்து பலமாக தாக்கியது. அவர் சுருண்டு விழுந்தார். ஆனாலும், எழுந்து வந்து அந்த பந்துவீச்சாளருக்கு பதிலடி கொடுத்தார்.

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தான் நிலை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மோசமாக பேட்டிங் ஆடியது. ஒரு கட்டத்தில் 150 ரன்களை தாண்டுவதே ராஜஸ்தான் அணிக்கு கடினமான விஷயமாக இருந்தது.

எதிர்பார்ப்பு எழுந்தது

எதிர்பார்ப்பு எழுந்தது

அப்போது அந்த அணியில் சஞ்சு சாம்சனுக்கு அடுத்து அதிக சிக்ஸ் அடித்துள்ள ராகுல் திவாதியா பேட்டிங் செய்ய வந்தார். அவருடன் மற்றொரு சிக்ஸ் அடிக்கும் ஆற்றல் கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் சேர்ந்தார். அதனால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இருவரும் 7வது விக்கெட்டுக்கு 20 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தனர். திவாதியா 12 பந்துகளில் 24 ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 10 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். இதில் திவாதியா மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் அடிக்கும் முன்பு தான் அந்த சம்பவம் நடந்தது,

சுருண்டு விழுந்தார்

சுருண்டு விழுந்தார்

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் ஆடி வந்த போது கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்தார் திவாதியா. நவ்தீப் சைனி வீசிய பந்து கை தவறி நேராக அவரது இதயத்துக்கு அருகே வந்து தாக்கியது. உடனே கீழே சுருண்டு விழுந்தார் திவாதியா.

இரண்டு சிக்ஸ்

இரண்டு சிக்ஸ்

எனினும், பின்னர் எழுந்த அவர் அடுத்த இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார். 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி 154 ரன்கள் குவிக்க உதவினார் அவர். மொத்தம் 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.

பெங்களூர் அணி வெற்றி

பெங்களூர் அணி வெற்றி

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி எளிதாக வென்றது. 155 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூர் அணியோ தேவ்தத் படிக்கல் 63 ரன்கள் எடுத்தும், கேப்டன் விராட் கோலி 72* ரன்கள் குவித்தும் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

அதிக சிக்ஸ்

அதிக சிக்ஸ்

ராகுல் திவாதியா கடந்த ஐந்து சீசன்களில் 20 போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் மொத்தமே 3 சிக்ஸ் தான் அடித்து இருந்தார். ஆனால், 2020 ஐபிஎல் சீசனில் நான்கே போட்டிகளில் 11 சிக்ஸ் அடித்து மிரள வைத்துள்ளார்.

பயிற்சி

பயிற்சி

ராகுல் திவாதியா சிக்ஸ் அடிப்பதற்கு தனியாக பயிற்சி செய்துள்ளார், வலைப் பயிற்சியில் அவரது ஆட்டத்தை பார்த்த பின்னரே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிகளில் வாய்ப்பு கொடுத்துள்ளது.

5 சிக்ஸ்

5 சிக்ஸ்

இதற்கு முந்தைய போட்டியில் அவர் முதல் 18 பந்துகளில் திணறி இருந்தார். அவரால் பந்தையே தொட முடியவில்லை. ஆனால், கடைசி நேரத்தில் ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து போட்டியின் திசையை மாற்றி ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 6, 2020, 21:01 [IST]
Other articles published on Oct 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+