Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

53 பந்தில் 72 ரன்.. கோலி செம கம்பேக்.. ராஜஸ்தானை காலி செய்த பெங்களூர்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி பேட்டிங்கில் தட்டுத் தடுமாறி 154 ரன்கள் சேர்த்தது.

அடுத்து ஆடிய பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் 63 ரன்கள் குவித்தார். விராட் கோலி கடைசி வரை நின்று 72 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூர் அணி 19.1 ஓவரில் வெற்றி பெற்றது.

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஜோஸ் பட்லர் - ஸ்டீவ் ஸ்மித் துவக்கம் அளித்தனர்.

ராஜஸ்தான் தடுமாற்றம்

ராஜஸ்தான் தடுமாற்றம்

ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் 4 ரன்களில் சர்சைக்குரிய வகையில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். பட்லர் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். 31 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது ராஜஸ்தான் அணி.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

உத்தப்பா 17 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். இந்த நிலையில் இளம் வீரர்கள் மஹிபால் லோம்ரார் 47 ரன்கள் சேர்த்து அணியை மீட்டார். ரியான் பராக் 16 ரன்கள் எடுத்தார். 16.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருந்தது ராஜஸ்தான் அணி.

கை கொடுத்த இருவர்

கை கொடுத்த இருவர்

அப்போது ராகுல் திவாதியா - ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி ஆட்டம் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ராகுல் திவாதியா 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் 10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். இவர்கள் ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

இலக்கு

இலக்கு

சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். உடானா 2, சைனி 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்களூர் அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூர் அணிக்கு ஆரோன் பின்ச் - தேவ்தத் படிக்கல் துவக்கம் அளித்தனர்.

பின்ச் ஏமாற்றம்

பின்ச் ஏமாற்றம்

ஆரோன் பின்ச் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இளம் வீரர் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு அபாரமான ஆட்டம் ஆடினார். அரைசதம் கடந்த அவர் வெப்பத்தால் தடுமாறினாலும் சமாளித்து ஆடினார். அவர் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மீண்டு வந்த கோலி

மீண்டு வந்த கோலி

விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், இந்தப் போட்டியில் அவர் மீண்டார். நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகம் எடுத்த கோலி 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.

பெங்களூர் வெற்றி

பெங்களூர் வெற்றி

கோலி கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்தார். பெங்களூர் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். இது பெங்களூர் அணியின் மூன்றாவது வெற்றி ஆகும்.

Story first published: Saturday, October 3, 2020, 20:19 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+