Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை அவமானங்கள்.. இதுதான் என் பதில்.. கோலியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்.. வாயடைத்த விமர்சகர்கள்

அபுதாபி : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

அவர் மீது கடும் விமர்சனங்கள் இருந்த நிலையில் அவர் சிறப்பான ஆட்டம் ஆடி 72 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தார்.

இந்தப் போட்டியில் கோலியின் ஆட்டத்தால் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விமர்சனம்

விமர்சனம்

கோலி 2020 ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ரன் குவிக்க முடியாமல் திணறி இருந்தார். ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்த போது கடும் விமர்சனம் எழுந்தது. அவர் மனைவியுடன் மட்டுமே கிரிக்கெட் ஆடினார் என்றெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

லாக்டவுன் நேரத்தில் மனைவி அனுஷ்கா சர்மா பந்துவீச்சில் மட்டுமே கோலி பேட்டிங் செய்தார் என்றெல்லாம் விமர்சனம் வைக்கப்பட்டது. அது பெரும் சர்ச்சை ஆனது. அடுத்த போட்டியிலும் கோலி ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பயிற்சி

பயிற்சி

அதன் பின் இரவு பகலாக பயிற்சி செய்தார் கோலி. அந்த வீடியோக்கள் கூட வைரல் ஆனது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் விராட் கோலி. இந்தப் போட்டியில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பேட் மூலம் பதில்

பேட் மூலம் பதில்

தன் மீதான விமர்சனத்துக்கு பேட் மூலமே பதில் அளித்துள்ளார் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 154 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சிறப்பாக பந்து வீசி அந்த அணியை கட்டுப்படுத்தியது.

தேவ்தத் படிக்கல்

தேவ்தத் படிக்கல்

அடுத்து ஆடிய பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் சிறப்பாக ஆடி 63 ரன்கள் சேர்த்தார். ஆரோன் பின்ச் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். அவர் நிலைத்து நின்று ஆடினார்.

கோலி அதிரடி

கோலி அதிரடி

கடைசி வரை களத்தில் நின்ற கோலி 53 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 7 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, October 3, 2020, 20:06 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+