Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்று சாதனை.. கிறிஸ் கெயில், கோலி வரிசையில் ஏபிடி.. வியக்க வைக்கும் டி20 ரெக்கார்டு!

ஷார்ஜா : ஏபி டிவில்லியர்ஸ் டி20 போட்டிகளில் மாபெரும் மைல்கல் சாதனை படைத்தார்.

9000 டி20 ரன்களை கடந்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார் டிவில்லியர்ஸ்.

2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் இந்த மைல்கல் சாதனை மூலம் கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், விராட் கோலி ஆகியோருடன் முக்கிய சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார்.

ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டம்

ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டம்

2020 ஐபிஎல் தொடரில் ஏபி டிவில்லியர்ஸ் 13 போட்டிகளில் 338 ரன்கள் குவித்துள்ளார். அவர் மற்ற பேட்ஸ்மேன்களை விட குறைவான ரன்கள் எடுத்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 171.21 ஆகும். 26 ஃபோர், 20 சிக்ஸ் அடித்துள்ளார்.

9000 ரன்கள்

9000 ரன்கள்

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார் ஏபி டிவில்லியர்ஸ். இந்தப் போட்டியில் அவர் 4 ரன்கள் அடித்த போது டி20 போட்டிகளில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் பல சாதனைகளை படைத்தார் அவர்.

தென்னாப்பிரிக்க அளவில் முதலிடம்

தென்னாப்பிரிக்க அளவில் முதலிடம்

தென்னாப்பிரிக்க அளவில் 9000 டி20 போட்டி ரன்களை எடுத்த முதல் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தான். இதன் மூலம், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் புதிய முத்திரை பதித்தார் டிவில்லியர்ஸ். உலக அளவிலும் சாதனைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றார்.

பட்டியலில் எட்டாம் இடம்

பட்டியலில் எட்டாம் இடம்

உலக அளவில் 9000 டி20 ரன்களை கடந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் எட்டாம் இடம் பிடித்தார். கிறிஸ் கெயில், கீரான் பொல்லார்டு, சோயப் மாலிக், பிரென்டன் மெக்குல்லம், டேவிட் வார்னர், விராட் கோலி, ஆரோன் பின்ச் அவருக்கு முன் இடம் பெற்றுள்ளனர்.

Story first published: Saturday, October 31, 2020, 21:48 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+