Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. கடைசி மேட்ச் வரை பரபரப்பு.. பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கப் போகும் டாப் அணி

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று பெரும் சுவாரசியமாக மாறி உள்ளது.

கடைசி லீக் போட்டி வரை எந்த அணி பிளே-ஆஃப் செல்லும் என்பது தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் இடம் பிடிக்கும் என சில நாட்கள் முன்பு வரி கருதப்பட்ட பெங்களூர் மற்றும் டெல்லி அணியில் ஒரு அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டி விரைவில் முடிவுக்கு வர உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? என்ற சுவாரசியமான கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே தன் பிளே-ஆஃப் இடத்தை உறுதி செய்துள்ளது.

புள்ளிப் பட்டியல்

புள்ளிப் பட்டியல்

புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர், டெல்லி அணிகள் 14 புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன. ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் 4 முதல் 7ஆம் இடம் வரை 12 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளன. பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் எட்டாம் இடத்தில் உள்ளது.

டெல்லி - பெங்களூர்

டெல்லி - பெங்களூர்

மும்பைக்கு அடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யப் போவது டெல்லி அல்லது பெங்களூர் அணி தான். இந்த அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி காலிறுதி சுற்று போல நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு நேரடியாக முன்னேறலாம்.

ஹைதராபாத் நிலை

ஹைதராபாத் நிலை

ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் மும்பைக்கு அடுத்து அதிகமாக இருந்தாலும் அந்த அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் செல்ல முடியும்.

பஞ்சாப் - சிஎஸ்கே

பஞ்சாப் - சிஎஸ்கே

பஞ்சாப் - சிஎஸ்கே இடையே ஆன போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை அருகே செல்லும். அந்த அணி நெட் ரன் ரேட்டில் டெல்லி, பெங்களூர் அணிகளை விட அதிகமாக இருந்தாலும், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பஞ்சாப் வாய்ப்பு ப[பறிபோகும்.

கொல்கத்தா, ராஜஸ்தான் நிலை

கொல்கத்தா, ராஜஸ்தான் நிலை

கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிலை தான் கவலைக்கிடமாக உள்ளது. அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அந்த அணிகள் இடையே நடக்கும் போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிக்கு சிறிய அளவில் பிளே-ஆஃப் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

இப்படி நடந்தது இல்லை

இப்படி நடந்தது இல்லை

எந்த ஐபிஎல் சீசனிலும் கடைசி நான்கு போட்டிகள் இத்தனை சுவாரசியமாக நடந்ததில்லை. 2020 ஐபிஎல் தொடரில் கடைசி லீக் போட்டி வரை சுவாரசியமாக மாறி உள்ளது. நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள மும்பை - ஹைதராபாத் போட்டி வரை யார் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வார்கள் என்பது யூகிக்க முடியாததாக இருக்கும்.

Story first published: Sunday, November 1, 2020, 1:04 [IST]
Other articles published on Nov 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+